பொது செய்தி

இந்தியா

சபரிமலை வழக்கு: கேரள தலைவர்கள் கருத்து

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
SabarimalaVerdict, sabarimalai, kerala, congress, ramesh cennithala, kadakampally surendran, congress, bjp, pinarayi vijayan, சபரிமலை, கேரளா, காங்கிரஸ், பா.ஜ.,

திருவனந்தபுரம்: சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு கட்டுப்படுவோம் என கேரள அரசு கூறியுள்ளது. அதேநேரத்தில், முந்தைய தீர்ப்பை செயல்படுத்தக்கூடாது என காங்கிரசும், பா.ஜ.,வும் கூறியுள்ளன.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான மறு சீராய்வு மனுவை, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் முந்தைய தீர்ப்பிற்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது.

இது தொடர்பாக தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்: உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு மாநில அரசு கட்டுப்படும். உத்தரவை திறந்த மனதுடன் வரவேற்போம். அரசை குறைசொல்லி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அரசை தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் குற்றம்சொல்லக் கூடாது. அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்ட போது, மக்கள் அமைதியாக இருந்தனர். அதேபோல், இந்த விவகாரத்திலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். அரசை அவமானபடுத்துவது தொடரக் கூடாது.
காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னிதாலா: கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பிற்கு தடை விதிக்கப்படாததால், மாநில அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறேன் என பிரச்னை ஏற்படுத்தக்கூடாது. மாநில அரசு தனது முந்தைய திட்டமான, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பதை செயல்படுத்தக்கூடாது.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் கோபாலகிருஷ்ணன்: முந்தைய தீர்ப்பிற்கு தடை விதிக்கப்படாததால், அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தற்போது பினராயி கையில் முடிவு உள்ளது. மறு ஆய்வு செய்ய உள்ளது நல்லது. முஸ்லிம் பெண்கள், மசூதிக்குள் நுழைவது குறித்து பினராயி விஜயன் அனுமதிக்க வேண்டும். சபரிமலை விவகாரத்தில், பினராயி தவறாக ஏதாவது செய்தால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பந்தளம் அரசு குடும்பத்தை சேர்ந்த சசிகுமார் வர்மா: பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, சபரிமலை வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டது, என்பது முந்தைய தீர்ப்பில் குறை உள்ளதை காட்டுகிறது. இது கடவுள் அய்யப்பனின் ஆசிர்வாதம் காரணம்.

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார்: 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
14-நவ-201916:36:24 IST Report Abuse
தமிழர்நீதி தீர்ப்பு இந்தியாவில் பெண்களுக்கு கோவில் கிடையாது, படிப்பு கிடையாது, அதான் ஐந்து ஏழு ஆக்கிவிடத்து
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X