பொது செய்தி

இந்தியா

சபரிமலைக்கு மீண்டும் செல்வேன் : திருப்தி தேசாய் 'அடம்'

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (61)
Advertisement

புதுடில்லி : கடந்த ஆண்டு கள்ளத்தனமாக சபரிமலைக்கு செல்ல முயன்ற திருப்தி தேசாய், பாதி வழியில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு நவ.,16 அன்று மீண்டும் சபரிமலை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.






சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என 2018 ம் ஆண்டு செப்., மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று (நவ.,14) இறுதி தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. மேலும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்ற நிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்நிலையில் இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள திருப்தி தேசாய், கோர்ட் உத்தரவு வரும் வரை பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. சிலர் கூறுவது போல் பாலின பாகுபடுத்துவது தவறு. நவ.,16 ம் தேதி நான் சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளேன் என்றார்.




கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய 2 வாரங்களுக்கு பிறகு நவம்பர் மாதம், சபரிமலைக்கு கள்ளத்தனமாக செல்வதற்காக புனேயில் இருந்து வந்த திருப்தி தேசாய், திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். பக்தர்கள் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தினர் போராட்டம் காரணமாக, விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் விடிய விடிய காத்திருந்த திருப்தி தேசாயை, வலுக்கட்டாயமாக போலீசார் திருப்பி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

திருப்தி தேசாய் சபரிமலை செல்வதற்கு காங்., மற்றும் பாஜ.,வினர் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kali Raj -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201906:07:54 IST Report Abuse
Kali Raj ஜெய்ஹிந்த்புரம் சபரிமலைல பெண்கள் போகனுமா வேண்டாமானு ஐயப்பனும் இந்துக்களும் முடிவு பண்ணட்டும். மசூதிகுள்ள பெண்கள் போகறதப் பத்தி நீங்களும் அல்லா வும் முடிவு பண்ணுங்க.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201902:25:30 IST Report Abuse
Tamilan நாட்டில் லச்சக்கணக்கான கோவில்கள் மசூதிகள் சர்ச்கள் இருக்கும் போது தனக்கு சம்பந்தமே இல்லாத சபரிமலைக்கு மட்டுமே செல்வேன் என்று அடம் பிடிப்பவர்களை என்னே என்று சொல்வது? . இவளுக்கும் தன் வயிற்றில் வெடிகுண்டை வைத்து தற்கொலை செய்வதுமட்டுமல்ல நூற்றுக்ணக்கானோரை கொலை செய்யும் தீவிரவாதிக்கும் என்ன வேறுபாடு ?.
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
15-நவ-201900:45:07 IST Report Abuse
Aarkay பக்தியுடன் செல்லுங்கள் யாரும் தடுக்கவில்லை வீம்புக்காக செல்லவேண்டாம் அப்படியே, ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் உள்ள மசூதிகளுக்கும் சென்று வாருங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X