பொது செய்தி

இந்தியா

150 ரன்களில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா 86/1

Updated : நவ 15, 2019 | Added : நவ 14, 2019
Advertisement
Test, Cricket, India, Bangladesh, டெஸ்ட், கிரிக்கெட், இந்தியா, வங்கதேசம்

இந்துார்: முதல் டெஸ்டில் ஷமி, அஷ்வின் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் அசத்த வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இந்துாரில் இன்று துவங்கியது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மோமினுல் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த், உமேஷ், ஷமி என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்தனர்.






ஷமி அபாரம்


வங்கதேச அணிக்கு 'வேகங்கள்' தொல்லை தந்தனர். உமேஷ் பந்தில் இம்ருல் கெய்ஸ் (6) ஆட்டமிழந்தார். ஷாத்மன் 6 ரன்களில் திரும்பினார். ஷமி 'வேகத்தில்' முகமது மிதுன் (13) சிக்கினார். அஷ்வின் 'சுழலில்' கேப்டன் மோமினுல் (37), மகமதுல்லா (10) அவுட்டாகினர். ஷமி பந்துவீச்சில் முஷ்பிகுர் (43), மெகதி ஹசன் (0) வெளியேறினர். மற்றவர்களும் ஏமாற்ற, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.


புஜாரா அசத்தல்


இந்திய அணிக்கு ரோகித் (6) ஏமாற்றினார். மயங்க் அகர்வால், புஜாரா ஜோடி எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்து, 64 ரன்கள் பின்தங்கி இருந்தது. மயங்க் அகர்வால் (37), புஜாரா (43) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X