பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.,யின் மனிதநேயம்; நெகிழும் மக்கள்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் எஸ்.பி., செல்வநாகரத்தினம், பொதுமக்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் செய்த காரியத்தால் அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.சில போலீசாரின் தவறான அணுகுமுறையால் பொதுமக்களின் பார்வையில் போலீஸ் குறித்து தவறான கருத்து இருக்க தான் செய்கிறது. ஆனாலும், சில போலீசார் மனித நேயத்துடனும், உதவி செய்யும் குணத்துடன் இருப்பது பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை.
SI, Nagapattinam, IPS_Officer, மனிதநேயம், எஸ்ஐ, நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் எஸ்.பி., செல்வநாகரத்தினம், பொதுமக்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் செய்த காரியத்தால் அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

சில போலீசாரின் தவறான அணுகுமுறையால் பொதுமக்களின் பார்வையில் போலீஸ் குறித்து தவறான கருத்து இருக்க தான் செய்கிறது. ஆனாலும், சில போலீசார் மனித நேயத்துடனும், உதவி செய்யும் குணத்துடன் இருப்பது பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை.
அப்படியொரு மனிதநேயமிக்க நிகழ்வு தான் நாகப்பட்டினத்தில் தினந்தோறும் நடந்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம், அனைத்து நாட்களிலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.


latest tamil news


ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், குறைகளுடன் வரும் பொதுமக்களை, பார்வையாளர் அறைக்கே சென்று சந்தித்து குறைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்கிறார். வயது வந்தோர், கைகுழந்தையுடன் வருவோர், மாற்று திறனாளிகள் ஆகியோர் படிக்கட்டு ஏறத்தேவையில்லை என பார்வையாளர் அறையிலேயே போர்டு வைத்துள்ளார்.
இதனால், பொதுமக்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை சம்மந்தமாக அவரிடம் நேரில் சென்று குறைகளை தெரிவித்து வருகின்றனர். நேரில் பலமுறை சென்று குறைகளை கூறினாலும், தீர்க்காமல் அலைகழிக்கும் பலரின் மத்தியில் எஸ்.பி.,யின் இந்த மனிதநேயத்தை பல தரப்பினரும் நெகிழ்வுடன் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
17-நவ-201918:42:43 IST Report Abuse
Sampath Kumar வாழ்த்துக்கள் சார்
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
17-நவ-201916:34:33 IST Report Abuse
muthu Rajendran மனித நேயம் நேர்மை யாருக்கும் உதவும் தன்மையை தொடர்ந்து கடை பிடியுங்கள் .உங்களை மக்கள் மனதார வாழ்த்துவார்கள். இறைவன் திருவருளும் உங்களை வாழ்த்தும்
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
17-நவ-201903:47:41 IST Report Abuse
N Annamalai அருமை .வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X