பிரதமர் சொன்னால் பிரச்னை தீரும்: ராவத்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (41)
Share
Advertisement

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியில் சம பங்கு தருவதாக பிரதமர் மோடி அறிவித்தால், பா.ஜ., - சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கும் என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.latest tamil newsமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 164 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ., 105 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 59 இடங்களில் தோல்வியை தழுவியது. பெரும்பான்மை இல்லாததால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் கவர்னர் பரிந்துரையின் பேரில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களிடம் உள்ள 105 எம்எல்ஏ.,க்களை அழைத்து பா.ஜ., பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அப்போது, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்படும் வரை தங்கள் தொகுதிகளுக்கு எம்எல்ஏ.,வாக பொறுபேற்றுக் கொள்ளக் கூடாது என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது. அத்துடன் ஆட்சி அமைப்பதற்கான 3 நாள் தொடர் ஆலோசனை முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.


latest tamil news


இதற்கிடையில் ஆட்சியில் சமபங்கு தரும் முடிவுக்கு தேர்தலுக்கு முன் ஒப்புக் கொண்ட பா.ஜ., தற்போது பின்வாங்குவதாக சிவசேனா குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அமித்ஷா, முதல்வர் பதவியில் பங்கு தருவதாக யாரும் சொல்லவே இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் இந்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சிவசேனா எம்.பி.,சஞ்சய் ராவத், ஆட்சியில் சமபங்கு என்பது குறித்து பிரதமர் மோடியிடம் அமித்ஷா உரிய நேரத்தில் கூறி இருந்தால் மகாராஷ்டிரா தற்போது இந்த அரசியல் குழப்பத்தை எதிர்கொண்டிருக்காது. தொகுதி பங்கீடு விவகாரத்தில் பா.ஜ., முக்கிய தலைவர்களை விலகி இருக்கும்படி மோடி கூறி இருக்கலாம்.
தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, பட்நாவிஸ் முதல்வராக தொடர்வார் என்றார். ஆனால் கண்ணியம் காப்பதற்காக நாங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அது எங்களுக்கு கூறப்பட்ட அரசியல் தகவலாகவும் நாங்கள் பார்க்கவில்லை.


latest tamil newsமூடிய கதவுகளுக்கு பின் போடப்பட்ட ஒப்பந்தத்தை அவர்கள் காப்பாற்றவில்லை. அதனாலேயே இதை நாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தோம். நாங்கள் அரசியலை வியாபாரம் ஆக்கவோ, லாப-நஷ்ட கணக்காகவோ கருதவில்லை. ஆனால் அது எங்களின் தன்மான பிரச்னை. இப்போது கூட ஆட்சியில் சமபங்கு அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தால், பா.ஜ., - சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்கும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
15-நவ-201904:44:14 IST Report Abuse
blocked user ஆசைதான். நடப்பவற்றை கவனித்தால் சிவசேனா ஒரு டம்மி என்பதை உணர்ந்து மோடிதான் வைத்து செய்வது போல தெரிகிறது.
Rate this:
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
14-நவ-201923:46:09 IST Report Abuse
ezhumalaiyaan இந்த அறிவு,பிரதமர் பிரேசில் புறப்படும் முன்பே இருந்திருக்கவேண்டும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-நவ-201922:18:26 IST Report Abuse
sankaseshan Why PM shoud intervene ? Sena has not changed . Let them deal with Inc and NCP They wil teach you good lesson .This useless fellow teased PM in samna editorials now he wants PM s help . Good joke.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X