புதுடில்லி : டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை சரி செய்யும் பொறுப்பு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உண்டு என டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

தலைநகர் டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்றின் மாசு மோசமான நிலையை அடைந்துள்ளது. இன்று இந்தியா கேட் பகுதியில் காற்று மாசின் அளவு 460 என்ற மோசமான நிலையை எட்டி உள்ளது. காற்று மாசு காரணமாக டில்லி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்தியா கேட், ஜனாதிபதிபதி மாளிகை உள்ளிட்டவை புகையால் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் காற்று மாசு தொடர்பாக டில்லி ஐகோர்ட் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது. அப்போது, நகரில் காற்று மாசுபாடு விஷத்தன்மை நிலையை எட்டி உள்ளது தொடர்பாக, நிலைமையை சரி செய்ய டில்லி அரசு துறைகளும், சுற்றுச்சூழல் தொடர்பான அமைப்புக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காற்று மாசுபாட்டை தடுப்பது தொடர்பான யோசனைகளில் எந்த குறையும் இல்லை. அதை அமல்படுத்துவதில் தான் பிரச்னை உள்ளது. மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான வழிமுறைகளை அமல்படுத்துவதில் மொத்தமாக குறைபாடு உள்ளது. டில்லியை மாசுபாடு இல்லாத நகராக மாற்றுவதில்லை அனைவரும் தங்களின் பங்கை உணர்ந்து செயல்பட வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது.
