பெரிய கதவு திறந்துள்ளது; ரபேல் குறித்து ராகுல்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (93)
Advertisement
Rafale, SupremeCourt, Rahul, BigDoor, ரபேல், ராகுல், பெரியகதவு, விசாரணை, உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: ரபேல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

'விமானப் படைக்கு, ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 'ரபேல்' ரக போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக எந்த முகாந்திரமும் இல்லை' என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் கவுல், ஜோசப் கொண்ட அமர்வு இன்று (நவ.,14) தள்ளுபடி செய்தது.




இந்நிலையில், இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி காங்., முன்னாள் தலைவர் ராகுல், மீண்டும் விசாரிக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜோசப் வெளியிட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டிய ராகுல், ஜோசப்பின் இந்த தீர்ப்பு, ரபேல் குறித்த விசாரணைக்கு பெரிய கதவை திறந்துள்ளது. மீண்டும் இந்த விசாரணையை முழு ஆர்வத்துடன் தொடங்கப்பட வேண்டும்.
இந்த ஊழல் குறித்து விசாரிக்க கூட்டு நாடாளுமன்ற குழுவை அமைக்க வேண்டும், என பதிவிட்டுள்ளார். மேலும், ரபேலில் பாஜ.,வின் பொய் என்னும் ஹேஸ்டேக்கும் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
15-நவ-201908:42:39 IST Report Abuse
elakkumanan கூட்டு பொரியல் வைக்கலாம். ஆனால், உங்களுக்கு உச்ச கோர்ட்டு தீர்ப்பை ஏற்பதில் என்ன தயக்கம்? அப்பொறம், அந்த பொரியல் குழுவில், இந்த பேப்பர்களை ஊரபோட்டு, ஊருக்கே கொடுப்பீங்க. அப்பொறம் , அந்த மதம் பேருல பத்திரிகை நடுத்தர திருட்டு பத்திரிகையில் வரி வரியா போட்டு , நாடு ராணுவ ரகசியத்தை எதிரிக்கு காட்டிக்கொடுக்கணும். இன்னொரு நூறு வருசத்துக்கு, இந்தியா அடிமையாவே (வெள்ளைத்தோலுக்கு ) இறுக்கனும். நீங்க, எல்ல நாட்டுக்காரன்கிட்டயும், NGO மூலமா, பிச்சை வாங்கி, வயிறு வளக்கணும். இந்தியா வளரக்கூடாது , நீங்களும், உங்க குடும்பமும், சொத்தும் வளரனும். அதுதானே திட்டம். இதுதானே அறுபது வருசமா செஞ்சீஜங்க. இனி, பதில் செய்கை. ஒன்னியும் கூட்டு , பொரியல் பண்ண முடியாது. தெருவில், தொண்டை தண்ணி வற்றும் வரை கத்தியே .................கெளம்பவேண்டியதுதான். 'கத்திக்கும்' இதுதான் கதி.........புரியுதா ? இனிமேல் இப்பிடித்தான். ஜெலுசில் சாப்பிடவேண்டாம். குடிங்கோ...பர்னால் கூட குடிங்கோ.
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201906:45:15 IST Report Abuse
ஆரூர் ரங் ஜோசப்பை BJP மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டுக்கு உயர்த்தத் தயங்கியபோது இந்த பப்புவின் ஆட்கள் ஜோசப்புக்காக முடித்துக்கொடுத்து கூவினது மறக்குமா ? இப்போ ராகுல் அதே ஜோசப் தீர்ப்பை புகழ்வதை பார்த்தால் நன்றியுணர்வு பளிச்சிடுதே . நேர்மை உறங்கும் நேரம்
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
15-நவ-201906:28:48 IST Report Abuse
Darmavan உச்ச நீதி தள்ளுபடி செய்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வீராப்பு காட்டும் கேவலம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X