சென்னை: ஆப்கோ, டி.எம்.ஆர்., திட்டங்களில் உபகரணங்களில் வாங்கியதில் ரூ.350 கோடி அளவிற்கு முறைகேடு எதுவும் நடக்கவில்லை என, தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. திட்டங்களை ஆய்வு செய்ததில் சில அலுவலர்கள் நடைமுறை தவறுகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
டி.எம்.ஆர்., ஆப்கோ திட்டங்களில் எந்த ஒரு ஒப்பந்தகாரருக்கும் இதுவரை தொகை எதுவும் வழங்கப்படவில்லை. 2 நகரங்களில் ஆப்கோ திட்டங்கள் ரூ.86 கோடிக்கு நிறைவடையும் நிலையில் உள்ளது. 10 மாவட்டங்களுக்கான டி.எம்.ஆர்., திட்டத்திற்கு ரூ 57.49 கோடி அளவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மாவட்டத்திற்கான ரூ 3.49 கோடிக்கான டெண்டர் மட்டும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.