திகார் சிறையிலிருந்து வெளியே வருவாரா சிதம்பரம்? இன்று தீர்ப்பு| Delhi high court to give verdict on chidambaram bail plea tomorrow | Dinamalar

திகார் சிறையிலிருந்து வெளியே வருவாரா சிதம்பரம்? இன்று தீர்ப்பு

Updated : நவ 15, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (23)
Share
புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு, சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது டில்லி உயர்நீதிமன்றம், இன்று (நவ.,15) தீர்ப்பு வழங்குகிறது.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம், ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், ஆகஸ்டில், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை
CBI, P Chidambaram, Chidambaram, INX Media, case, Tihar Jail, Hicourt, உயர்நீதிமன்றம், ஐகோர்ட், சிதம்பரம், ஜாமின், கிடைக்குமா, டில்லி, திகார் ஜெயில், dinamalar, தினமலர்

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு, சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது டில்லி உயர்நீதிமன்றம், இன்று (நவ.,15) தீர்ப்பு வழங்குகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம், ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், ஆகஸ்டில், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. சி.பி.ஐ., தாக்கல் வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் கேட்டு, டில்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.


latest tamil news
ஜாமின் கிடைக்குமா?


இவரது ஜாமின் மனு மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், டில்லி உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஒருவேளை சிதம்பரத்துக்கு நாளை ஜாமின் கிடைத்தால், திகார் சிறையில் இருந்து சிதம்பரம் வெளியே வரலாம். எனவே இத்தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X