சென்னை: மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர், விருதுநகர், விழுப்புர மாவட்ட கலெக்டர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டராக உள்ள எல். சுப்பிரமணியன் மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர துணை ஆணையர் கோவிந்தராவ் தஞ்சை மாவட்ட கலெக்டராகவும், விருதுநகர் கலெக்டர் சிவஞானம் சுகாதாரத்துறை இணை ஆணையராகவும் . குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் கண்ணன் விருதுநகர் மாவட்ட கலெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

தற்போது வரை மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக இருந்து வந்த எஸ் பழனிசாமி டவுண் பஞ்சாயத்து இயக்குநராகவும், மதுரை முன்னாள் கலெக்டர் ராஜசேகர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராகவும், வேளாண்துறை கலை, கலாச்சார துறை இயக்குனராக இருந்த சிஜி தாமஸ் பள்ளி கல்விதுறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.