சென்னை: சென்னை மேயர் பதவிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதியை நிறுத்த வேண்டும் என, அக்கட்சி தலைமையிடம் இளைஞர் அணியினர் மனு கொடுத்துள்ளனர்.
படத்தில் நடிப்பதை விட தற்போது அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டிருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க., இளைஞரணி செயலாளராக, பதவி வழங்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலின் போது, அவரை திருச்சியில் போட்டியிட வைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்த நிலையில், தற்போது அவரை சென்னை மேயராக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது.

தி.நகர் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு , சென்னை மேயராக, உதயநிதிக்கு சீட் கேட்டு அக்கட்சியிடம் மனு கொடுத்துள்ளார். தி.மு.க., தலைவராக உள்ள ஸ்டாலின், முன்னாள் சென்னை மேயராக இருந்தார். இதனால் அவரது மகன் உதயநிதியையும் தந்தையை போல், சென்னை மேயராக்க திமுகவினர் விரும்புகின்றனர். இது நடக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.