உலக கால்பந்து: கடைசி நிமிடத்தில் இந்தியா 'டிரா'

Added : நவ 14, 2019
Advertisement
India,இந்தியா,football,கால்பந்து,டிரா,ஆப்கானிஸ்தான்

துசான்பே: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச்சுற்றில் லென் டுங்கெல் கோல் அடித்து கைகொடுக்க, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்திய அணி கடைசி நிமிடத்தில் 1-1 என 'டிரா' செய்தது.

கத்தாரில் 2022ல் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதற்கான ஆசிய பிரிவு தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. மொத்தம் 40 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, 'இ' பிரிவில் கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

இந்திய அணி (106வது இடம்) இன்று(நவ.,14) தனது நான்காவது போட்டியில் 149வது இடத்திலுள்ள ஆப்கானிஸ்தானை (149) சந்தித்தது. 28வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆஷிக் குருனியன் அடித்த பந்து கோல் போஸ்ட் மேலாக சென்றது. முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+1) ஆப்கனின் நஜேம் கொடுத்த பந்தை அப்படியே வாங்கிய நாஜரி, கோலாக மாற்றினார். இந்திய அணி முதல் பாதியில் 0-1 என பின் தங்கியது.

இரண்டாவது பாதியில் 58 வது நிமிடத்தில் கேப்டன் செத்ரி, தலையால் முட்டிய பந்தை, ஆப்கானிஸ்தான் கோல் கீப்பர் அஜிஜி தடுத்து விட்டார். 66வது நிமிடம் இந்திய வீரர் உடாண்டா அடித்த பந்தையும் அஜிஜி வெளியே தள்ளினார். அப்போது இந்தியாவுக்கு 'கார்னர்' கிடைத்தது. இதில் எளிதாக கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை சுனில் செத்ரி கோட்டை விட்டார்.

போட்டியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+3வது) இந்தியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் பெர்னாண்டஸ் அடித்த பந்தை, மாற்று வீரராக களமிறங்கிய லென் டுங்கெல், தலையால் முட்டி கோலாக மாற்றினார். இந்திய அணிக்காக இவர் அடித்த முதல் கோல் இது. முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதுவரை பங்கேற்ற 4 போட்டியில் இந்தியா 3 'டிரா', 1 தோல்வியுடன் பட்டியலில் 4வது இடத்தில் (3 புள்ளி) உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X