'தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஊழியர்களுக்கு, இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பணி வரன்முறைப்படுத்த வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர், நாகை, தாலுகா அலுவலகம் எதிரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வெயில் கடுமையாக வீசியது; விரைவாக முடித்துக் கொள்ள, நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.
அங்கு வந்த வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம், 'தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது' என்றார்; அவர்கள் கலைய மறுத்தனர். இன்ஸ்பெக்டர் அவர்களை, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். நுழைவு வாயிலில், மரத்தின் நிழலில் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு அலுவலர் ஒருவர், 'இன்ஸ்., நம்மை விரட்டினாலும் விரட்டினாரு... நிழல்ல நிற்க வசதி கிடைச்சுது...' எனக் கூறியபடி, ஆர்ப்பாட்டத்திலிருந்து, நைசாக நழுவினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE