சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

உச்சக்கட்ட அவமானம்!

Added : நவ 14, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 உச்சக்கட்ட அவமானம்!

'எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்; இவர் இப்படி செய்யலாமா. இவரது தந்தைக்கு தெரிந்தால் வருத்தப்பட மாட்டாரா' என, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், ஆந்திர மாநில அதிகாரிகள்.

ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சியில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகித்தவர் நர லோகேஷ். இவர், வேகமான செயல்பாடு, தொண்டர்களுடன் நெருக்கம் என, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் தோற்று, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. ஒவ்வொரு துறையிலும், கடந்த ஆட்சியில் நிலுவையில் உள்ள திட்டங்கள், செலவுகள் பற்றி கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்துக்கு, விசாகபட்டினம் விமான நிலையத்தில் உள்ள பேக்கரியிலிருந்து ஒரு, 'பில்' வந்திருந்தது. அதில், ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த நர லோகேஷ், இந்த பேக்கரியில், ஐந்து ஆண்டுகளாக, 'ஸ்நாக்ஸ்' வாங்கியதில், 15 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அதிகாரிகள், அடுத்து என்ன செய்வது என தெரியாமல், வெல வெலத்து போயுள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவை பழிவாங்குவதற்கு நேரம் பார்த்திருக்கும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விஷயத்தில், நர லோகேஷின் மானத்தை கப்பலேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நர லோகேஷோ, 'இது உச்சக்கட்ட அவமானம்' என, கடும் கோபத்துடன் கூறுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
21-நவ-201909:10:26 IST Report Abuse
Varun Ramesh என்னய்யா அநியாயம்? கேவலம் 15 லட்ச ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி சாப்பிட்டது குத்தமாண்ணே? அதுவும், அரசியலில் இருந்துகொண்டு 15 லட்ச ரூபாய்க்கு ஓசி பிஸ்கட் வாங்கி சாப்பிடக்கூட உரிமையில்லையா?
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
18-நவ-201916:32:38 IST Report Abuse
madhavan rajan உச்ச கட்ட அவமானம் யாருக்கு? அதை ஏற்படுத்தியது யார்? இவர்களுடைய ஆட்சி முடிவதற்கு முன்னரே பில் வாங்கி பணம் கொடுத்திருக்கலாமே? யார் தடுத்தது?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-நவ-201916:07:00 IST Report Abuse
Endrum Indian வீதியில் பணி புரியும் போலீஸ் அங்குள்ள பெட்டி கடையில் ஒரு டீ, ஒரு பிஸ்கட் எடுத்து பணம் கொடுக்காமல் இருந்தால் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் இப்படி பணம் கொட்டிக்கிடப்பவன் இதே செயலை செய்தால் அது வெறும் மமதை, அகங்காரத்தை தான் குறிக்கின்றது இதற்கு ஒரே தண்டனை ரூ 15 கோடி அவனிடமிருந்து வசூலித்து அரசு கருவூலத்தில் சேர்த்து அந்த பேக்கரிக்கு உடனே எவ்வளவு பணம் பாக்கியோ அதை கட்டி விட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X