அரசியல் செய்தி

தமிழ்நாடு

உலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை

Updated : நவ 16, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (10)
Advertisement
world bank, உலக வங்கி,OPS, அதிகாரி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், ஆலோசனை

சென்னை: தமிழகத்தில், குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி உதவியை பெறுவதற்காக, துணை முதல்வர் பன்னீர்செல்வம், உலக வங்கியின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் உள்ள, உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் சென்றார். அங்கு, இந்தியா, வங்கதேசம், இலங்கை, பூடான் நாடுகளுக்கான, உலக வங்கியின் செயல் இயக்குனர் அபர்ணா மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

அப்போது, துணை முதல்வர் பேசியதாவது: தமிழகத்தின், சமூக - பொருளாதார முன்னேற்றத்தில், உலக வங்கி பெரும் பங்காற்றி உள்ளது.தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்ல, தொடர்ந்து ஆதரவு அளித்து வரும், உலக வங்கிக்கு, தமிழக அரசின் சார்பில் நன்றி.திறமையான, நிலைத்த திட்டமிடுதல் போன்றவற்றால், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு துறைகளில் சாதனை புரிந்து, இந்தியாவில் மிக முக்கியமான மாநிலம் என்ற அந்தஸ்தை, தமிழகம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் நீண்ட நெடிய முன்னேற்ற பாதையில், உலக வங்கி உறுதியான பங்குதாரராக இருந்து வருகிறது. நகர்ப்புற வளர்ச்சி, சாலை போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, வேளாண், வீட்டுவசதி போன்ற துறைகளில், உலக வங்கியின் ஒத்துழைப்பு, தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது, உலக வங்கியின், ஆறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக வங்கி, தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தில் ஈடுபடும் வகையில், 'தமிழ்நாடு நீடித்து நிலைத்த வீட்டுவசதி மற்றும் குடியிருப்புகள் திட்டத்தை' உலக வங்கி ஊழியர்களுடன் இணைந்து, தமிழக அரசு தயாரித்து வருகிறது.போக்குவரத்து மற்றும் குடிநீர் துறைகள் வளர்ச்சிக்கான, 'சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப்' திட்டம் குறித்து, பேச்சு நடந்து வருகிறது. இந்த திட்டம் மீதான பேச்சு, வேகமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின், சர்வதேச நாணய நிதியமான, ஐ.எம்.எப்., அலுவலகம் சென்று, இந்தியா, இலங்கை, வங்கதேசம், பூடான் நாட்டிற்கான, செயல் இயக்குனர் சுர்ஜித் பல்லாவை, துணை முதல்வர் சந்தித்து பேசினார்.

அங்கு அவர் பேசுகையில், ''தமிழகத்தின் பொது நிதி மேலாண்மையை மேம்படுத்த, சர்வதேச நாணய நிதியத்தின், தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிபுணத்துவத்தை பெற, தமிழக அரசு விரும்புகிறது.ஆலோசனை நிபுணத்துவம் அளிப்பது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள, இந்திய அரசின் அனுமதியுடன், சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சிக்குரியது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-நவ-201923:07:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பல லட்சம் கோடிகளை கடனாக கொடுத்து கமிஷன் அடித்த கூட்டம். எல்லாம் பாதாள சாக்கடை திட்டம். அங்கே வங்கியில் அதிகாரத்தில் இருக்குறவனும் இந்தியன் தான். சென்னையில் தரமணியில் இவங்க ஆபிஸ் இருக்கு. எல்லாம் களவாணிக்கூட்டம். பணமெல்லாம் பாதாளத்தில் மறைக்கப்பட்டு, சாக்கடை இன்றும் வெளியே ஓடுகிறது. ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நேராக கடலில் கலக்கிறது அல்லது ஆறுகளில்..
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-நவ-201919:43:01 IST Report Abuse
தமிழ்வேல் உட்கார்ந்திருக்கும் போது கோட்டில் பட்டன் போடக் கூடாது...
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201913:33:44 IST Report Abuse
rajesh மேலும் பல டாஸ்மாக் மற்றும் எலைட் மதுபான கடைகளை திறப்பதற்கு உலக வங்கியிடம் கடன் கேட்க சென்றுள்ளார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X