அரசியல் செய்தி

தமிழ்நாடு

டுவிட்டரில் உளறிய ஸ்டாலின்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (82)
Share
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,Twitter,டுவிட்டர்,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்கு பின் அந்த பதிவு நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பழனிசாமி உள்ளார். ஆணைய செயலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.பழனிசாமி செயல்பட்டு வந்தார். பேரூராட்சி இயக்குனர் பதவியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இன்று(நவ.,14) அவர் பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆணைய செயலராக விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். செயலர் மாற்றம் பற்றிய தகவல் வெளியானதும் ஸ்டாலின் 'டுவிட்டர்' பக்கத்தில் கண்டன அறிக்கை பதிவிடப்பட்டது.


latest tamil newsஅதில் கூறப்பட்டதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை திடீரென மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் பணிகளை செய்தவரை மாற்றியது ஏன்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாக பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாரா? இந்த ஏற்பாடு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவா அல்லது உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஒட்டுமொத்தமாக தில்லுமுல்லுகளில் ஈடுபடவா? இவ்வாறு அதில் பதிவிடப்பட்டது.

செயலரை ஆணையர் என பதிவிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் கழித்து அந்தப் பதிவுகள் அகற்றப்பட்டு ஆணையருக்கு பதிலாக செயலர் என திருத்தம் செய்யப்பட்ட பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
18-நவ-201911:38:27 IST Report Abuse
narayanan iyer தமிழன் அவர்களே ஜெயா ஒரு ருபாய் சம்பளம் வாங்கி சொத்துசேர்த்தாக சொல்கிறீர்கள். அவர் முதலில் ஒரு மாபெரும் நடிகை. 136 படங்களில் நடித்தவர். இன்று ஒரு சில படங்களில் நடித்த நடிகையர் வீட்டிலேயே செருப்பு கணக்கில்லாமல் இருக்கிறது. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சகட்டுமேனிக்கு பேசக்கூடாது. அவர் நடிகையாக இருக்கும் காலத்திலேயே திராட்சை தோட்டம் வாங்கிவிட்டார். அவர் தவறே செய்யவில்லை என்று சொல்லவில்லை. அவரே அறியாமல், கூட இருந்த கூட்டம் செய்த தவறுக்கு அவரும் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார். அவர் மீண்டும் செய்த மாபெரும் தவறு சசிகலாவை மீண்டும் சேர்த்துகொண்டதும் சசியின் அறிவுரைப்படி சசியின் சொந்தக்கார டாக்டரை நம்பி மருந்து உட்கொண்டதுதான் . என்னசெய்ய ??
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
17-நவ-201920:12:26 IST Report Abuse
JSS மக்கள் திலகம் =எம்ஜிஆர், நடிகர் திலகம் = சிவாஜி கணேசன் உளறல் திலகம் =ஸ்டாலின்
Rate this:
Cancel
Tamilan - Doha,கத்தார்
17-நவ-201916:35:34 IST Report Abuse
Tamilan Mrs,சிறிசேன என்பதை MRS. சிறிசேனா என்று உளறுகிறவர் பிரதமர், கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று உளறியவர் முதலமைச்சர், இவங்களுக்கு எல்லாம் உளறுவதற்கு முழு உரிமை இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மட்டும் உளறினால் அது பெரிய கொலை குற்றமாம்.
Rate this:
Srinath Babu KSD - Madurai,இந்தியா
18-நவ-201914:03:08 IST Report Abuse
Srinath Babu KSDவேறொரு நாட்டைச்சேர்ந்த ஒருவரின் பெயரை உச்சரிப்பதில் தவறு செய்வது சகஜம். மேலும் முதலமைச்சர் ஒருமுறை தான் மாற்றி பேசியுள்ளார். சுடலை தினமும் நமக்கு மீமீஸ்க்கு கன்டென்ட் கொடுப்பவர் அவரை நாம் குற்றம் சொல்ல முடியுமா...
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-201913:56:12 IST Report Abuse
Yaro Oruvanபார்றா சிறிசேன என்பதை சிறிசேனா என்று சொன்னால் உளறல்.. அடேய்.. அந்நிய நாட்டினின் பெயர்களை உச்சரிப்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.. ஏதாவது சொல்லணும்னு சொல்றானுவ இந்த அமைதி மார்க்கத்துக்காரனுவ.. எத எடுத்து சொறிஞ்சா அரிப்பு நிக்கும்னு திரியிறவங்களுக்கு எது கிடைச்சாலும் சொறிவானுவ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X