எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

நெரிசலில் திணறுது தமிழ்நாடு இல்லம்; வீடுகளுக்கு செல்ல முடியாத எம்.பி.க்கள்

Updated : நவ 15, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (6)
Advertisement
நெரிசல், திணறுது, தமிழ்நாடு இல்லம்,வீடு,செல்ல முடியாத, எம்.பி.க்கள்

டில்லியில், தமிழக எம்.பி.,க்களுக்கு புது வீடுகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையிலும், பல்வேறு காரணங்களால், அவர்களால் அந்த வீடுகளுக்கு குடி போக முடியவில்லை. வரும், பார்லி., கூட்டத்தொடரிலும், அவர்கள், தமிழ்நாடு இல்லத்திலேயே தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக, எம்.பி.,க்கள், அனைவருக்குமே, டில்லியில் புது வீடுகள் ஒதுக்கப்பட்டு விட்டன.இவர்களில் சிலர், 'வீட்டில் வசதிகள் போதவில்லை, புல்தரையுடன் கூடிய கீழ் வீடு வேண்டும், வாஸ்து சரியில்லை, மாடி வீடு வேண்டும், பங்களா வேண்டும்' என்பது போன்ற காரணங்களை சொல்லி, புதிய ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

மற்றபடி, 90 சதவீதம் பேருக்கு, வீடுகள் ஒதுக்கீடு முடிந்துவிட்ட நிலையில், இவர்களில் பெரும்பாலானோர், புது வீடுகளுக்கு செல்லாமல், தமிழ்நாடு இல்லத்திலேயே தங்கி இருக்கின்றனர். இதற்கு காரணம், ஒதுக்கப்பட்ட வீடுகளில், மராமத்து பணிகளை செய்ய வேண்டிய பொதுப்பணித்துறை அலுவலர்கள் இழுத்தடிப்பது தான்.

இருந்தாலும், இந்தப் பணிகளை உடனே முடிக்க, நம்மூர் எம்.பி.,க்கள், அழுத்தமோ, ஆர்வமோ காட்டவில்லை. இந்நிலையில், வரும், 18 முதல், குளிர்கால கூட்டத் தொடருக்காக, பார்லி., கூடவிருக்கிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடர் முழுவதும், எம்,பி.,க்கள் தமிழ்நாடு இல்லத்தில் தான் தங்கப்போகின்றனர்.

மிகவும் குறுகலாக, சிறியதாக இருக்கும் இந்த இடமே போதும்; இங்குள்ள உணவகமே போதும்; செலவும் குறைவு என்கிற ரீதியில், அவர்கள் திருப்தி பட்டுக் கொள்வது போல தெரிகிறது. அதோடு, எம்.பி.,க்களின் பெயர்களைக் கூறிக் கொண்டு, அவர்களது உறவினர்களும், நண்பர்களும் அறைகளை எப்போதும் ஆக்கிரமித்திருக்கின்றனர். இதனால், தமிழகத்திலிருந்து, வேறு பணிகளுக்காக வரும் மற்ற விருந்தினர்களுக்கு, அறைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த கூட்டத்தொடரிலாவது, தமிழக எம்.பி.,க்கள், வார விடுமுறை நாட்களில், டில்லியிலேயே தங்க வேண்டும்; பொதுப்பணித்துறை அலுவலர்களை சந்தித்து, தங்களது வீடுகளுக்கான மராமத்து பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
15-நவ-201921:55:24 IST Report Abuse
Girija இது ஒருவருக்கு மிகவும் சவுகரியம் இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201921:28:50 IST Report Abuse
ஆப்பு அவங்க என்ன? ஆளும்கட்சி எம்.பி க்களா? உடனடி வசதி செஞ்சு கொடுப்பதற்கு? யாருக்கும் பைசா பிரயோஜனமில்லை.
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
15-நவ-201911:22:35 IST Report Abuse
chails ahamad புலம்பவிடுவது அதாங்க திமுக வை திட்ட வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் சங்கிகளுக்கு, இதுபோன்ற விடயங்கள் சக்கரையை போன்று இருப்பதில் ஆச்சரியபட தேவையில்லையே. எத்தனைதான் வாய்ப்பு கிடைக்கும் போது திமுக வை வசை பாடி திட்டி திரிந்தாலும் அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவே இருந்திடும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X