பொது செய்தி

இந்தியா

பெண்களை யாரும் தடுக்க முடியாது!

Added : நவ 15, 2019
Share
Advertisement
புதுடில்லி: சபரிமலை விவகாரத்தில், கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட பின், மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் என்பவர், கடந்த ஆண்டு நவம்பரில், சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றார். போராட்டக்காரர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால், அவர் கோவிலுக்கு செல்ல முடியாமல் திரும்பினார்.இந்நிலையில், நேற்றைய தீர்ப்பு குறித்து,
பெண்களை யாரும் தடுக்க முடியாது!

புதுடில்லி: சபரிமலை விவகாரத்தில், கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட பின், மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் என்பவர், கடந்த ஆண்டு நவம்பரில், சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றார். போராட்டக்காரர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால், அவர் கோவிலுக்கு செல்ல முடியாமல் திரும்பினார்.

இந்நிலையில், நேற்றைய தீர்ப்பு குறித்து, செய்தியாளர்களிடம் திருப்தி தேசாய் கூறியதாவது: இந்த விவகாரத்தில், ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்கும் வரை, சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை இல்லை. எனவே, பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம். அதை யாரும் தடுக்க முடியாது. நான், சபரிமலைக்கு நாளை சென்று, வழிபாடு செய்ய உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X