சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன பாடகி சுசித்ரா மீட்பு

Added : நவ 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
காணாமல் போன பாடகி சுசித்ரா மீட்பு

சென்னை: சென்னை, அடையாறில், மாயமானதாக கூறப்பட்ட, பிரபல பாடகி சுசித்ராவை, போலீசார், ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து மீட்டனர். அவர், சேத்துப்பட்டில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரபல திரைப்பட பாடகி சுசித்ரா. இவர், 'யாரடி நீ மோகினி' படத்தில் நடித்த, கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார். 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில், திரைப்பட பிரபலங்களின் அந்தரங்க படங்கள் வெளியாகின. இதன் பின்னணியில் சுசித்ரா இருப்பதாகவும், இவருக்கு, மனநிலை சரியில்லை எனவும் கூறப்பட்டது.

இதையடுத்து, சுசித்ராவிடம் இருந்து, கார்த்திக் விவகாரத்து பெற்றார். சென்னை, அடையாறு, காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில், சுசித்ரா தனியாக வசித்து வந்தார்.இவரது சகோதரி சுனிதா. திருவான்மியூரில் வசிக்கிறார். இவர், சுசித்ராவை, தி.நகரில் உள்ள, ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்து வந்துள்ளார். சில மாதம் சிகிச்சை எடுத்துள்ளார்.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், சுசித்ரா அவரது தோழியிடம், 'துாக்க மாத்திரை சாப்பிட்டேன்' எனக் கூறி உள்ளார். தோழி கொடுத்த தகவலில், அடையாறு போலீசார், சுசித்ரா வீட்டுக்கு சென்றபோது, வீடு பூட்டி இருந்தது.

இதையடுத்து, 'சுசித்ராவை காணவில்லை' என, சுனிதா, அடையாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், அவர் தங்கி இருப்பது தெரியவந்தது.

பெண் போலீசாருடன் சென்று, சுசித்ராவை மீட்டனர். தி.நகர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, சுனிதா முயன்றனர். அங்கு, செல்ல மறுத்ததையடுத்து, பெண் போலீசார் உதவியுடன் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சுசித்ரா சிகிச்சை பெற்று வருவதாக, சுனிதா, நேற்று போலீசில் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - Bangalore,இந்தியா
20-நவ-201909:43:42 IST Report Abuse
sam That is life, Anything can happen at any time. Try to be humble and make good friends than more friends.. If her ex-husband near to her, she will recover soon.
Rate this:
Share this comment
Cancel
பெருமாள்மலைகுரங்கு - கள்ளந்திரி,இந்தியா
16-நவ-201913:17:29 IST Report Abuse
பெருமாள்மலைகுரங்கு சுள்ளான் கூட ஏற்பட்ட கூத்தாட்ட தகராறு . கடைசியா திருமணவாழ்கை முறிவு . மனநல சிகிச்சை . பாவம் career காலி . இனி போகிற இடத்தில வாய்ப்பு கிடைக்காது .சின்மயி போன்ற தரமற்ற நேர்மையில்லாத நண்பர்கள் .தற் கொலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை . பாவம் .
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201909:33:35 IST Report Abuse
கதை சொல்லி பெண்களை போகப் பொருளாக பார்ப்பதால் எத்தனையோ பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில் இது ஒரு துளி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X