புதுடில்லி: 2020ம் ஆண்டு குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ, பங்கேற்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும், ஜன., 26ல் டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில், உலகத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பர். இந்தாண்டு நடந்த விழாவில் தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசே பங்கேற்றார்.
கடந்தாண்டு நடந்த விழாவில், ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், 2020 ஜனவரி, 26ல் நடக்கும் நிகழ்ச்சியில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க, பிரேசில் அதிபர் ஒப்புதல் அளித்து உள்ளார். பிரேசில் அதிபரை நேற்று முன்தினம் சந்தித்து, பிரதமர் மோடி பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE