சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை

Added : நவ 15, 2019 | கருத்துகள் (24)
Advertisement
மதுரையில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை

மதுரை: சிறுமியை நடுரோட்டில் துாக்கி போட்டு, கழுத்தில் மிதித்து தாக்குதல் நடத்திய தந்தை மீது கொடுக்கப்பட்ட புகாரை, போலீசார் வாங்க மறுத்து, இழுத்தடித்தனர்.

மதுரை, திருமங்கலம் கொடிமரத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்சமது, 30; மனைவி மும்தாஜ்பேகம், 28. இவர்களுக்கு, 10 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர். குடி போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த அப்துல் சமது, இரண்டு மாதங்களுக்கு முன், மனைவியை வெட்டியுள்ளார். இதையடுத்து அவர், தனியாக அம்மா வீட்டில் இருந்து வருகிறார்.

நேற்று காலை, 10 வயது மகள், தன் அம்மாவை பார்க்க சென்று, வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், கோபமான அப்துல் சமது, சிறுமியை தெருவிற்கு இழுத்து வந்து தாக்கியுள்ளார்.அடித்ததில் கீழே விழுந்த சிறுமியின் கழுத்தில் ஏறி நின்றுள்ளார். அருகில் இருந்த டியூப் லைட்டை எடுத்தும் தாக்கியுள்ளார். அங்கு பதிவான, 'சிசிடிவி' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.

அருகில் இருந்தவர்கள், சிறுமியை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜமாத்தார் உதவியுடன், புகார் செய்ய சென்றபோது, போலீசார் வாங்க மறுத்தனர். வி.ஏ.ஓ., பாண்டியராஜன் அளித்த புகாரையும், போலீசார் வாங்க மறுத்து விட்டனர். தகவலறிந்த, எஸ்.பி., மணிவண்ணன் கடிந்து கொண்டதை அடுத்து, புகாரை பெற்று, போலீசார் விசாரிக்கின்றனர்.

குழந்தை மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அப்துல் சமது, சில மாதங்களுக்கு முன், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிச் சென்றபோது, ரோந்து போலீசார் விரட்டி, அவரை கைது செய்தனர். தற்போது, ஜாமினில் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Bangalore,இந்தியா
20-நவ-201915:37:24 IST Report Abuse
Muthu புகாரை வாங்க மறுக்கும் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
18-நவ-201915:07:09 IST Report Abuse
மூல பத்திரம் சுடலை கடிதம் எழுதுவாரா, ஏன் IIT ல் படித்தால் மட்டும் தானா
Rate this:
Share this comment
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
20-நவ-201912:21:19 IST Report Abuse
S.M.Noohuமுதலில் செய்தியே படி லேய். அதுக்கு பிறகு சொல்லுலேய்....
Rate this:
Share this comment
Cancel
Bahurudeen Ali Ahamed - aranthangi,இந்தியா
17-நவ-201910:26:11 IST Report Abuse
Bahurudeen Ali Ahamed "பெயரை பார்த்தாலே அதிருது பின் எங்கிருந்து போலீஸ் புகார் வாங்கும். ராசமாரியாதை வேண்டுமென்றால் அரபி பெயரை வைத்துக்கொண்டால் போதும், அடுத்தவனையும் போட்டு தள்ளலாம் ஒரு பய ஒன்னும் கேட்க மாட்டான்" சகோதரா முஸ்லீம் பெயரைக்கேட்டாலே ஏன் இந்த வெறுப்பு , ஒரு குடிகாரன் , திருட்டுப்பய அவனுடைய குழந்தையாகவே இருந்தாலும் மோசமா அடிச்சு கழுத்துல காலவச்சு மிதிச்சு அடிச்சிருக்கான் டியூப் லைட்ட வச்சி தாக்கிருக்கான் அவனை கண்டித்திருக்கலாம் இல்லை தண்டித்திருக்கலாம் அதைவிடுத்து அவன் பேரை குறிப்பிட்டு அவன் இந்த மதத்தில் உள்ளவன் அவன் அப்படிதான் இருப்பான் என்று வன்மம் கக்குவது சரியா.
Rate this:
Share this comment
vijay - Manama,பஹ்ரைன்
18-நவ-201918:03:01 IST Report Abuse
vijayசரியான கருத்து சகோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X