சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கம்பம் வன அலுவலகத்தில் மக்கிய மரக்கட்டைகள்

Added : நவ 15, 2019
Advertisement

கம்பம், :கம்பம் வனச்சரக அலுவலக வளாகத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட ரூ. பல லட்சம் மதிப்புள்ள மரக்கட்டைகள் மக்கி மண்ணோடு மண்ணாய் போயின.கம்பம் வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் விலையுயர்ந்த ெஷட்யூல் டிம்பர் எனப்படும் தேக்கு, தோதகத்தி, சந்தனம், வேங்கை, படாங்கு போன்ற மரங்கள் 20 ஆண்டுகளுக்கு முன் வெட்டி கடத்தப்பட்டன.கூடலுார் ,கம்பத்தில் கடத்தல்காரர்களின் வீடுகளுக்குள் புகுந்து போலீசார் உதவியுடன்,வனத்துறையினர் வெட்டிய மரங்களை பறிமுதல் செய்தனர். கூடலுார் ஒட்டான்குளத்திற்குள் மறைத்து வைககப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தேக்கு, தோதகத்தி மரக்கட்டைகள்மீட்கப்பட்டது.அவை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டது. பாதுகாப்பின்றி மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் கரையான அரித்து, மண்ணோடு மண்ணாகி மக்கிப்போனது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்ற காரணத்தை காட்டிய வனத்துறை அதிகாரிகள் மேல்நடவடிக்கைக்கு அலட்சியப்படுத்தி யதே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X