'வாய்மையே வெல்லும்!' 3 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (8)
Advertisement
வாய்மையே வெல்லும்,Rafale,Rahul,contempt case, supreme court, verdictm, ராகுல், ரபேல், மோடி, அவதூறு வழக்கு, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், Modi, dinamalar, தினமலர், ஒப்பந்தம், முறைகேடு, நடக்கவில்லை, மத்திய அரசு, நற்சான்று, sabarimala, Hindu, ஹிந்து பெண், பொது கொள்கை, வகுக்க, முடிவு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நாளை மறுநாள் ஓய்வு பெறப் போவதை அடுத்து மிக முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்புகள் வழங்கி வருகிறார். நேற்று சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்த தடை கோரிய மனு, ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறிய மனு, கடந்த லோக்சபா தேர்தலின்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல், பா.ஜ.வைச் சார்ந்த பிரதமர் மோடியை 'காவலாளியே திருடன்' என மறைமுகமாகத் தாக்கிப் பேசியதை எதிர்த்த மனு ஆகியவற்றின் மீது தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி சபரிமலை விவகாரம் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது; ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான மனு தள்ளுபடி செய்யப்பட்டது; 'பொறுப்பான பதவியில் இருப்பவர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும்போது வார்த்தைகளை இனி கவனமாகப் பயன்படுத்த வேண்டும்' என ராகுலுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அவருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


தேவையில்லாதது!




* ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை.

* ஒப்பந்தம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் 2018 தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியதிலும் எந்த முகாந்திரமும் இல்லை.

* ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது.

விரிவான செய்திக்கு: https://www.dinamalar.com/news_detail.asp?id=2411634


7 நீதிபதி அமர்வு!




* கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிப்பது சபரிமலையில் மட்டுமல்ல; இன்னும் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது.

* மதம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பாக பல தரப்பட்ட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்த தடை மசூதிகளில் பெண்கள் வழிபாடு நடத்த தடை பெண்களின் பிறப்புறுப்பை சிதைப்பது ஆகிய மதம் தொடர்பான விஷயங்களை ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஆய்வு செய்து தீர்ப்பளிக்கும்.

விரிவான செய்திக்கு: https://www.dinamalar.com/news_detail.asp?id=2411654


கவனமா பேசுங்க!




* 'காவலாளியே திருடன்' என உச்ச நீதிமன்றம் சொன்னதாக ராகுல் பேசியது உண்மைக்குப் புறம்பானது. இது போன்ற கருத்துகள் தெரிவித்ததை ராகுல் தவிர்த்திருக்க வேண்டும்; கவனமாக இருந்திருக்க வேண்டும்.

* ஒரு விவகாரத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது உண்மை நிலையை ஆராயாமல் பேசுவது துரதிருஷ்டவசமானது.

* நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு தனக்கு எதிரான மனுவை நிராகரிக்குமாறு ராகுல் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அவருக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

விரிவான செய்திக்கு: https://www.dinamalar.com/news_detail.asp?id=2411637

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201912:53:47 IST Report Abuse
Tamilan ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் முதல், கோர்ட்டுகளில் வக்கீல்கள் என, ஒரு நாட்டின் மக்களின் மதிப்பை நிர்ணயிக்கும் சந்தை சார்ந்த பொருளாதாரம் வரை அனைத்தும் வாயால், பிரச்சார உத்திகளால், வாதாடும் திறமைகளால் முடிவு செய்யப்படும் பொது வாய்மைக்கு எங்கே இடம் உள்ளது? வாயே வெல்லும் வாய்மை அல்ல. சில சமயங்களில் வாயால் வாய்மை வெல்லலாம்
Rate this:
Share this comment
Cancel
Ram - Panavai,இந்தியா
15-நவ-201909:11:02 IST Report Abuse
Ram இந்த ஊரு இன்னுமா நம்பிட்டுஇருக்கு
Rate this:
Share this comment
Cancel
sudhapriyan - Chennai,இந்தியா
15-நவ-201907:06:59 IST Report Abuse
sudhapriyan அதான் சொல்லிட்டாருல்ல.. போங்கப்பா .. போய் அவுங்க அவுங்க பொழப்ப பார்ப்போம் ... சீக்கிரம் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X