நண்பர்களானது எப்படி... ஜின்பிங்கிடம் மோடி உருக்கம்!

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (35)
Share
Advertisement
Modi, Xi Jinping, India, China, BRICS, friends, நண்பர்கள், மோடி, ஜின்பிங், இந்தியா, சீனா, பிரிக்ஸ், தினமலர், dinamalar

பிரேசிலா: பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே, சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள் உட்பட பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து, இருவரும் ஆலோசித்தனர்.

கடந்த மாதம், தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு ஜின்பிங் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இரு தலைவர்களும் தனிமையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர். இதற்கிடையே, இந்த மாதம் நடந்த ஆசியான் மாநாட்டின்போது, சீனாவின் முயற்சியால், 16 நாடுகள் இடம்பெறும், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதில் பங்கேற்க, மோடி மறுத்துவிட்டார்.

இந்நிலையில், இரு தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, இருவருக்கும் இடையேயான, மூன்றாவது முறைசாரா உச்சி மாநாட்டுக்காக, சீனாவுக்கு வரும்படி, மோடிக்கு ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.


latest tamil newsஇந்த சந்திப்பின்போது மோடி கூறியதாவது: உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் முதல் சந்திப்பு பிரேசிலில் தான் நடந்தது. அப்போது இருவருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில், நாம் மிகவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். பல்வேறு அமைப்புகளிலும் நாம் சந்தித்தோம். நீங்கள் என்னுடைய சொந்த மாநிலத்துக்கு வந்தீர்கள். உங்களுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றீர்கள்.

இந்த ஐந்து ஆண்டுகளில், நம்முடைய நட்பு, பிணைப்பு மற்றும் நம்பிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. மாமல்லபுரத்துக்கு வந்து, நம்முடைய உறவில் புதிய பாதையை மற்றும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தினீர்கள். இவ்வாறு, அவர் பேசினார். மாமல்லபுரத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் அழைப்புக்கு, ஜின்பிங் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
15-நவ-201913:38:49 IST Report Abuse
Nallavan Nallavan பார்டர்-ல பீரங்கிகளை நிறுத்தின ஒடனே ஓடி வந்த ரகசியம் இப்போ வைரல் ..... என்னதான் ஸ்டிராங்கா இருந்தாலும், உதார் விட்டாலும் இப்போ நீ போருக்கு ரெடியா இல்ல -ன்னு உலகத்துக்கு காட்டிட்டோம் ..... இனிமே ஹாங்காங், தைவான் எல்லாம் துள்ள ஆரம்பிச்சுரும் .. வடகொரியாவும் அமெரிக்கா கிட்டே பம்முது...... எல்லாம் மோதி எபெக்ட் ..... ஆமா கணியக்காவுக்கும், அந்தப் பழைய சொர்ணாக்காவுக்கும் தூத்துக்குடியில் போராடுனதுக்கு, நல்ல பேமெண்ட் போலிருக்கே ..... தவிர இந்தோனேசியாவுல நிலக்கரி அதிகம் கிடைக்கிற தீவும் வாங்கிக்கொடுத்துருப்பீங்க .....
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201913:27:34 IST Report Abuse
Tamilan நாடு நாடா மக்கள் பணத்தில் போயி, நாடு நாடா கூவி கூவி (சவுதி உள்பட)எல்லா நாட்டுக்காரர்களையும் இந்தியாவுக்கு கூப்பிவிட்டு ........
Rate this:
Share this comment
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
15-நவ-201912:28:33 IST Report Abuse
Believe in one and only God He'll நக்கல், உண்மை உங்களுக்கு கசக்க தான் செய்யும். 1962 war பத்தி தெரியுமா? என் அப்பா army யில் அந்த war யில் border யில் இருந்தார். ஒரு வாரம் முன் இந்தியாவுடன் ஒப்பந்த கையெழுத்து போட்டு விட்டு ராத்திரியோட ராத்திரியா attack பண்ணினான். சீன பொருட்களை இந்தியாவில் விற்க தான் சீனாக்காரன் நடிக்கிறான்.அது புரியாத மோடியின் பக்தர்கள்
Rate this:
Share this comment
15-நவ-201915:15:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்நான் பல கடவுளை வணங்குவேன் , உனக்கென்ன பிரச்சினை. உன் மதமாற்ற பிரச்சாரத்தை போலிப்பெயராக இங்கே வைக்காதே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X