ஹரியானாவில் 10 புதிய அமைச்சர்கள்

Added : நவ 15, 2019
Advertisement

சண்டிகர்:ஹரியானாவில், புதிதாக பொறுப்பேற்றுள்ள, பா.ஜ., தலைமையிலான அரசில், 10 புதிய அமைச்சர்கள், நேற்று பதவி ஏற்றனர்.
ஹரியானாவில், சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், ஜனநாயக் ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து, பா.ஜ.,வின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சியின் துஷ்யந்த் சிங் சவுதாலா துணை முதல்வராகவும் சமீபத்தில் பதவி ஏற்றனர்.
இந்நிலையில், கட்டார் தலைமையிலான அமைச்சரவையில், புதிதாக 10 பேர், அமைச்சர்களாக, நேற்று பொறுப்பேற்றனர். 6 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 4 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.பா.ஜ.,வை சேர்ந்த 8 பேர், ஜனநாயக் ஜனதா கட்சி மற்றும் சுயேச்சை ஆகியோருக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டன.புதிய அமைச்சர்களுக்கு, மாநில கவர்னர் சத்யதியோ நரேன் ஆர்யா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X