அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் போட்டி தி.மு.க., விருப்ப மனு வழங்கல்

Added : நவ 15, 2019
Advertisement
 உள்ளாட்சி தேர்தலில் போட்டி தி.மு.க., விருப்ப மனு வழங்கல்

விழுப்புரம்:விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,வில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான, விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
உள்ளாட்சி தேர்தலில், போட்டியிட விரும்பும் தி.மு.க., கட்சி நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகங்களில் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன் பேரில், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., வில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு தாக்கல் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் துவங்கியது. மாவட்ட செயலர் பொன்முடி எம்.எல்.ஏ., விருப்ப மனுக்களை வழங்கினார்.நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 25 ஆயிரம் ரூபாயும், கவுன்சிலருக்கு 5,000 ரூபாயும், பேரூராட்சி தலைவருக்கு 10 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு 2,500 ரூபாயும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு 10 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 5,000 ரூபாயும் கட்டணம் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட மனுவை அளித்தனர்.வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டுமென, தி.மு.க., நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கவுதமசிகாமணி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு ஜனகராஜ், துணைச் செயலர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலர் கள் பிரபாகரன், தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, நகர செயலர் சக்கரை, இளைஞரணி தினகரன், மாணவரணி ஸ்ரீவினோத், தொண்டரணி அமைப்பாளர் கபாலி, நகர துணைச் செயலர் புருஷோத்தமன், நிர்வாகிகள் ஏழுமலை, அமர்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X