பொது செய்தி

இந்தியா

நீதிமன்ற உத்தரவில் குழப்பம்: முதல்வர் விஜயன்

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (19)
Advertisement
சபரிமலை, பினராயி விஜயன், உச்சநீதிமன்றம்

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: சபரிமலை தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில சந்தேகங்களும், குழப்பங்களும் உள்ளதாகவும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.




இது தொடர்பாக நிருபர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: சபரிமலை தொடர்பான மறு சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில சந்தேகங்களும், குழப்பங்களும் உள்ளது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். தற்போதைய நிலையில், பழைய தீர்ப்பிற்கு தடை விதிக்கப்படவில்லை. பழைய தீர்ப்பை மாற்றி உத்தரவிடப்படவில்லை. அனைத்து வயது பெண்களையும், சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு இன்னும் அமலில் தான் உள்ளது .தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-201915:25:15 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அய்யப்பன் கோவில் புனிதத்தை கெடுக்கலாம் என்று நினைத்து இஸ்லாமிய அமைப்பு வழக்கு போட்டது , அது இன்று முஸ்லீம் பெண்கள் மசூதிக்குள் நுழைவது , பெண்ணின் பிறப்புறுப்பு சிதைப்பது பற்றியும் விசாரிக்க உள்ளது , அதன்படி இவை அனைத்தும் அடுத்த தீர்ப்பில் வெளியாகும். தனக்கு தானே குழி தோண்டிக்கொண்டார்கள் , மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
15-நவ-201911:55:49 IST Report Abuse
Viswam தேர்தலுல வாங்கின அடி இனிமேலும் வர காலத்துல தொடருமா இல்லியா, அது தன்னே இ சேட்டனுட ஆசயகுழப்பம் .
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201911:44:53 IST Report Abuse
நக்கல் குழப்பதுக்கு காரணம் ரெண்டு விஷயம்.. ஒண்ணு, பாராளுமன்ற தேர்தலில் இந்துக்கள் வெளிப்படுத்திய கோபம்... இரண்டாவது, இந்த தீர்ப்பில் நீதிபதி மசூதிகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொன்னது... நான் இந்த தீர்ப்பு வந்தபோதே சொல்லியிருந்தேன் இது இஸ்லாமியர்களைதான் அதிகம் பாதிக்கும் என்று... நாளை மசூதிகளிலும் பெண்கள் அனுமதிக்கவேண்டும் என்று சொன்னால் எதிர்க்கட்சிகள் எல்லோருக்கும் திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி இருக்கும்... ஐயப்பன் இந்த மாதிரி மனிதர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார்...
Rate this:
Share this comment
RAJ MD - trichy,இந்தியா
15-நவ-201915:28:06 IST Report Abuse
RAJ MDகழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது என நிரூபிக்கிறீர்களே...
Rate this:
Share this comment
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201917:32:01 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன்கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே அது சரி உமக்கு ஏன்யா மூக்கு வேர்குது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X