பொது செய்தி

தமிழ்நாடு

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Added : நவ 15, 2019
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அம்பேத்கர் விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரம், கல்வி நிலை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்த பாடுபட்டவர்கள் மற்றும் சாதனை புரிந்தவர்களில் ஒருவருக்கு,

கிருஷ்ணகிரி: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அம்பேத்கர் விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரம், கல்வி நிலை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்த பாடுபட்டவர்கள் மற்றும் சாதனை புரிந்தவர்களில் ஒருவருக்கு, ஆண்டுதோறும், தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி வருகிறது. அதன்படி, 2020ம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று, அம்பேத்கர் விருது பெற விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று, தங்களை பற்றிய முழு விபரங்களுடன், கடந்த பத்து ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களின், சமூக பொருளாதாரம், கல்வி நிலை மற்றும் வாழ்க்கைத்தரம் உயர்த்த மேற்கொண்ட பணிகளுக்கான ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும், 22க்குள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண், 26ல் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X