மாணவர்களுக்கு ஓவிய போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஓவிய போட்டி

Added : நவ 15, 2019
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், நேற்று குழந்தைகள் தினத்தையொட்டி, அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு ஓவியப்போட்டி நடந்தது. போட்டியை, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். இதில், 60 மாணவ, மாணவியர் ஓவியம் வரைந்தனர். பின்னர், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், நேற்று குழந்தைகள் தினத்தையொட்டி, அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு ஓவியப்போட்டி நடந்தது. போட்டியை, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். இதில், 60 மாணவ, மாணவியர் ஓவியம் வரைந்தனர். பின்னர், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர், முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், மற்ற மாணவர்களுக்கு சான்றிதழையும் வழங்கினர். நிகழ்ச்சியில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் ரவி, ஓய்வு பெற்ற கலை ஆசிரியர் சங்கர் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X