சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செக்ஸ் பாடம் நடத்திய ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

Added : நவ 15, 2019
Advertisement

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை அருகே, செக்ஸ் பாடம் நடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கொங்களம்மன் கோவில் அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர் சுரேஷ், 37. இவர், பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியருக்கு ஆபாச படங்களை காட்டியதுடன், பாலியல் தொந்தரவும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, ஜாதி பெயரை சொல்லியும் திட்டியுள்ளார். இது குறித்து வந்த புகார்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணைக்கு உத்தரவிட்டனர். மாணவிகள் எட்டு பேரும் கொடுத்த புகார் கடிதத்தின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஆசிரியர் சுரே?ஷ சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் மெகராஜ் உத்தரவின்படி, மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதா பிரியா, பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பள்ளி மாணவிகளிடம் மற்றுமின்றி, தற்போதைய தலைமையாசிரியர் மாதையன், முன்னாள் தலைமை ஆசிரியைகள் கவுரி, திலகவதி ஆகியோரிடமும் விசாரித்து அறிக்கை பெற்று சென்றுள்ளார். இந்நிலையில், மாணவியரின் பெற்றோர் நேற்று ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் சுரேஷ் மீது புகார் அளித்தனர். அதன்படி, செக்ஸ் பாடம் நடத்திய சுரேஷ் மீது, இன்ஸ்பெக்டர் இந்திரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X