பொது செய்தி

இந்தியா

காஷ்மீருக்கு விரைவில் சட்டசபை தேர்தல்

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜம்மு : புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என ஜம்மு- காஷ்மீர் துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்மு தெரிவித்துள்ளார்.





இது குறித்து அவர் கூறுகையில், இதே போன்ற நிலை நீடிக்காது. விரைவில் தேர்தல் நடத்தப்படும். அதற்கான பணிகளும் விரைவில் துவங்கப்படும். தேர்தல் நடத்தப்பட்டு சட்டசபையுடனான முழு யூனியன் பிரதேசம் உருவாக்கப்படும் என்றார்.





ஆக.,05ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனையடுத்து காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு 2 புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் எனவும், காஷ்மீர் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்படி காஷ்மீரில் புதிய சட்டசபை உருவாக்கத்திற்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
15-நவ-201912:57:00 IST Report Abuse
ezhumalaiyaan நல்ல செய்தி. இந்தியாவில் ஸ்ரீநகர் பகுதிக்கு மட்டும் நான் இதுவரை போகமுடியவில்லை. படகு வீட்டில் ஜீலம் நதியில் பயணிப்பது எந்நாளோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X