சபரிமலைக்கு பெண்கள்: ஜகா வாங்கும் கேரளா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலைக்கு பெண்கள்: ஜகா வாங்கும் கேரளா

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (23)

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு தனியாக போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்துள்ளார்.






சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நேற்று (நவ.,14) உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது.





இந்நிலையில் இது தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் கேட்ட போது, இந்த உத்தரவு சிக்கலானது. கோர்ட் உத்தரவுபடி வரும் காலங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் வர முயன்றால் நிலைமையை எப்படி கையாள்வது என தெளிவாக சொல்ல முடியவில்லை. தெளிவில்லாமல் உள்ளதால் இந்த உத்தரவு அதிக குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும் என்றார்.





கேரள சட்டச அமைச்சர் ஏ.கே.பாலன் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மாநில அரசுக்கு அதிக பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சபரிமலை வரும் எந்த ஒரு பெண் பக்தருக்கும் அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்படாது. கடந்த ஆண்டு கோர்ட் உத்தரவை அமல்படுத்துவதற்காக சில பெண் பக்தர்களுக்கு அரசு போலீஸ் பாதுகாப்பு அளித்ததால் கடுமையான சூழல் உருவானது. பக்தர்களின் கடுமையான போராட்டத்திற்கும், கோர்ட் உத்தரவிற்கும் இடையே கடும் வேறுபாடு இருந்ததால், பதற்றமான நிலையே உருவானது என்றார்.

தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், சபரிமலைக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால், பாதுகாப்பு அளிக்க மாட்டோம் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


நீதிபதி அறிவுறுத்தல்

இதற்கு, நீதிபதி பாலி நரிமன் கூறுகையில், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உத்தரவில் மாற்றம் இல்லை. மறு உத்தரவு வரும் வரை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும், என அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X