மே.வங்கத்தில் கவர்னர் - முதல்வர் ‛‛டிஷ்யூம், டிஷ்யூம்''

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
Governor,Mamata Banerjee,கவர்னர், முதல்வர், மம்தா பானர்ஜி, மேற்கு வங்கம்

கோல்கட்டா: நீண்ட தூரத்தில் பயணம் செய்ய உள்ள பயணத்திற்கு மாநில அரசு ஹெலிகாப்டர் வசதி செய்யவில்லை என மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் புகார் கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே ஏற்கனவே இருந்த மோதல் பெரிதாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் கவர்னர் ஜக்தீப் தன்கர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி வருகின்றனர். நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறும் போது, அரசியல் சாசன பதவிகள் குறித்து நான் எதுவும் கூற மாட்டேன். ஆனால், சிலர் பா.ஜ.,வின் ஊதுகுழல் போல் செயல்படுகின்றனர். எனது மாநிலத்திலும் என்ன நடக்கிறது என பார்க்கலாம். இங்கு, அவர்கள் தனியாக ஒரு அரசை நடத்த முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: கோல்கட்டாவில் இருந்து 600 கி.மீ., தொலைவில் உள்ள பரக்கா நகரில் நடக்கும் நிகழ்ச்சியில், கவர்னரும், அவரது மனைவியும் பங்கேற்க ஹெலிகாப்டர் வசதியை மாநில அரசு தரவில்லை. இதனையடுத்து அவர்கள், கார் மூலம் அங்கு சென்றனர். ஹெலிகாப்டர் குறித்து தலைமை செயலர் கவனத்திற்கு கொண்டு சென்று பதில் கிடைக்கவில்லை. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில மாதங்களாக, பல விவகாரங்களில் கவர்னர் - முதல்வர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் உளவு பார்க்கப்பட்டதாக வந்த தகவல் தொடர்பாக, மம்தா கூறுகையில், தனது போனும் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு தன்கர் கூறுகையில், தங்களது ரகசியம் பாதிக்கப்படுகிறது என பல அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் குறை சொல்கின்றனர் என்றார்.
மாநில அரசு நடத்தும் விழாக்களில் புறக்கணிக்கப்படுவதாக கவர்னர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கோல்கட்டாவில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்க, அழைப்பு இல்லை. இதற்கு மாநில அரசு தான் காரணம். துர்கா பூஜைக்கும் என்னை அழைக்க வில்லை. இது வேதனையானது என்றார்.
கோல்கட்டாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலையில், மாணவர்களால் முற்றுகையிடப்பட்ட மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை கவர்னர் சென்று மீட்டு வந்தார். இது மம்தாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மம்தா கூறுகையில், கவர்னர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். அவர் பா.ஜ.,வின் கையாள் என்றார்.
இதற்கு கவர்னர் அளித்த விளக்கத்தில், அரசியல் விவகாரத்தில் என்னை இழுக்கக்கூடாது. ஒரு தலைபட்சமாக நான் செயல்படவில்லை. ராஜ்பவன் கதவுகள் திறந்தே உள்ளன. யார் வேண்டுமானாலும் வந்து என்னை சந்திக்கலாம். முதல்வர் சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்து. ஜனநாயக நாட்டில் அனைவரும் தங்களது பதவிகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆல்வின், பெங்களூர் எப்போதும் பிரச்சினை எல்லோரிடமும் பிரச்சினை. மம்தா பானர்ஜி அரசியலில் இருந்து விலகினால் பிரச்சினைகள் தீர்ந்து விடும்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-நவ-201913:18:04 IST Report Abuse
Tamilan இது பல வருடங்களாக நடப்பதுதான். அடுத்து தமிழக பொம்மையை வைத்து தெலுங்கானாவில் துவங்கிவிட்டது. தங்கள் கைப்பாவைகள், தலையாட்டி பொம்மைகளை வைத்தே பிழைப்பு நடத்திய காங்கிரசைப்போல் இப்போது பி ஜெ பியும் மாறிவிட்டது. காலத்தின் கட்டாயமா? அல்லது காங்கிரசைப்போலவே நாடுமுழுவதையும் அபகரிக்கும் பேராசையா? காங்கிரசைப்போலவே பெருநஷ்டத்தில் முடிந்தால் பரவாயில்லை. முன்னர் நடந்த அந்நியர்களின் ஆக்கிரமிப்பு, காலனியாதிக்கம் என்று பொய் முடியாமல் இருந்தால் சரி. ஆனால் காங்கிரசிப்போலவே மோடியின் கீழ் இந்தியா அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இனியும் துரிதமாகிக்கொண்டிருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201911:24:45 IST Report Abuse
நக்கல் சுடாலின் சொன்ன மாதிரி நாடு முழுதும் சர்வாதிகாரம் மோடி தலைமையில் வரவேண்டும். தேச வளர்ச்சிக்கு தடையா இருகிக்கறவங்களை அப்புறப்படுதணும்.. கவர்னரை மதிக்காத போக்கும், நேர்மையான ஆளும்கட்சியை அவமதிக்கும் போக்கும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X