சென்னை: பொதுப்பணித்துறை தொடர்பான கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் தொடர்பான புத்தகத்தை முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார்.அப்போது பேசிய அவர், குடிமராமத்து திட்டம் மக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மக்கள் இயக்கமாக உருவாக்கி தொடர்ந்து நிறைவேற்றுகிறோம். ஜெயலலிதாவின் கனவு திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இவ்வாறு முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE