
இசை அரசி பி.சுசீலாம்மாவிற்கு 85 வயது
அந்த காந்தர்வ குரலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாளை அவரது ரசிகர்களும் தினமலரும் இணைந்து மிகக்குதுாகலமாக கொண்டாடினர்

சென்னை நட்சத்திர ஒட்டலின் நடைபெற்ற அவரது பிறந்த நாளுக்கு வந்த ரசிகர்கள் அனைவரும் உணர்ச்சி பெருக்கெடுத்து பேசினர்

எங்கள் பொழுது துடங்குவதும் தொடர்வதும் முடிவதும் சுசீலாம்மாவின் பாடல்களால்தான் என்றனர் பலர்.

சோர்வுற்ற சமயங்களில் அவரது பாடல்கள்தான் எனக்கு உற்சாக ஊற்றாக இருந்தது என்றும் என் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது அவரது பாடல்கள்தான் என்றும் பலர் குறிப்பிட்டனர்.

25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பல மொழிகளி்ல் பாடியவர் என்பதை எல்லாம் தாண்டி அவர் மீது அனைவருக்கும் மரியாதை ஏற்படுத்திய விஷயம் அவரது எளிமைதான், எந்த நிலையிலும் தான் இவ்வளவு பெரிய சாதனை செய்துவிட்டோம் என்ற கர்வத்தை கடுகளவும் தலைக்கு கொண்டு போகாத எளிமையின் வடிவம் அவர் என்று சொன்னபோது அரங்கம் கைதட்டி ஆமோதித்தது.
குழந்தை பருவம் முதல் இன்றைய காலகட்டம் வரையிலான அவரது அபாரமான வளர்ச்சியை விளக்கும் விதமான குறும்படம் ஒன்று திரையிடப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.
அதே போல அவர் ஜனாதிபதி உள்ளீட்டவர்களிடம் விருது பெற்றது உள்பட நுாற்றுக்கும் மேலான படங்களைக் கொண்ட புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது.
தினமலர் கோவை வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் அவருக்கு ஆளுயர மாலைஅணிவித்து கோயில் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தார் அதே போல மதுரை தினமலர் வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு பரிசு வழங்கி கவுரவித்தார்.
அதிக பாடல்கள் பாடியவர் என்ற முறையி்ல் கி்ன்னஸ் சாதனை பெற்றவர் பி.சுசீலா இந்த சாதனையை பதிவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை விவரி்த்து சொன்னது பிரமிக்கவைத்தது.
ஆனால் இவை அனைத்தையும் அமைதியாக கேட்டு சிரி்த்துக் கொண்டு, ரசிகர்கள் கொடுத்த பூங்கொத்துக்களை ஏற்றுக்கொண்டு சின்ன சின்ன வார்ததைகளால் வந்திருந்தோரை மகிழ்வித்து மகிழ்ந்த பாடகி சுசீலாம்மாவிற்கு இந்த பிறந்த நாள் அவருக்கு புதிய அனுபவம்தான்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE