இந்த செய்தியை கேட்க
லக்னோ: அயோத்தியில் மசூதிக்கு மாற்றாக உலகில் எதை கொடுத்தாலும் அதை ஏற்க தயாராக இல்லை என அயோத்தி வழக்கில் முக்கிய மனுதாரரான ஜமாத் உலமா இ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.

அயோத்தி வழக்கில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்பிற்கு சொந்தம் எனவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் தர வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தொடர்பாக ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் செயற்குழு கூட்டம் டில்லியில் நேற்று (நவ.,14)நடந்து. இதில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா, வேண்டாமா என்பது பற்றியும், சீராய்வு மனு தாக்கல் செய்வதா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை குறித்து உ.பி., ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா ஆசாத் ரஷிதி கூறுகையில், மசூதிக்கு மாற்றாக உலகில் எதை கொடுத்தாலும் ஏற்க முடியாது. அது பணமோ அல்லது நிலமோ எதுவாக இருந்தாலும் சரி. இதை செயற்குழுவில் உள்ள அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
மசூதிக்கு மாற்று என எதை ஏற்க முடியாது.மற்ற எந்த இஸ்லாமிய அமைப்புக்களும் இதை ஏற்பது குறித்து கூற எனக்கு உரிமையில்லை. 2 நாட்களில் கோர்ட் உத்தரவின் நகல் கிடைத்து விடும். அதன் பிறகு எங்களின் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட செயல்பாடு குறித்து முடிவு செய்வோம் என்றார். அதே சமயம் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றிய கேள்விக்கு அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE