பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் டீசல் தேவை சரிவு

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (23)
Advertisement
டீசல், விற்பனை, சரிவு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவில், மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த அக்., மாதம் டீசல் தேவை சரிந்து விட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாட்டில், டீசல் தேவை ஆண்டுக்காண்டு 7.4 சதவீதம் குறைந்து, அக்., மாதத்தில் 6.51 மில்லியன் டன்களாக சரிந்துவிட்டது. 2017 ம் ஆண்டு ஜனவரிக்குப் பின், மூன்றாண்டுகளில் இல்லாத அளவாக டீசல் தேவை சரிந்து விட்டது என கூறப்பட்டுள்ளது.





வாகன விற்பனை சரிவு, காஸ் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தேவை அதிகரிப்பு ஆகியவை காரணமாக டீசல் நுகர்வு குறைவுக்கு காரணமாக அமைந்துவிட்டது. மேலும், வாகன உற்பத்தி உள்ளிட்ட தொழில்துறைகளில் நிலவும் தேக்கத்தின் காரணமாக, நாட்டின் டீசல் விற்பனை சரிந்திருக்கிறது. அதே நேரத்தில், காஸ் அல்லது பெட்ரோல் விற்பனை 8.9 சதவீதம் அதிகரித்தள்ளது.

தற்போது டீசல் விற்பனை குறைந்திருந்தாலும், அடுத்த 6 மாதத்தில், டீசல் தேவை அதிகரிக்கும் என ஐஓசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
16-நவ-201915:10:05 IST Report Abuse
Harinathan Krishnanandam மிக நல்ல செய்தி அரசின் மக்களின் சிக்கன நடவடிக்கை தொடரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
GBR -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201922:44:11 IST Report Abuse
GBR nalladhu thaana
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201917:06:54 IST Report Abuse
ஆப்பு ஸ்விக்கி, ஸொமாட்டோ மூலம் வருஷம் 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு பெருகி எல்லோரும் டூ வீலர் வாங்கி பெட்ரோல் தேவை அதிகமாயிருச்சு. கண்டெய்னர் லாரியுல் கரன்சி கடத்தறது குறைஞ்சு போய் டீசல் விற்பனை படுத்திருச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X