பொது செய்தி

இந்தியா

மயங்க் அகர்வால் சதம்: இந்திய அணி ஆதிக்கம்

Added : நவ 15, 2019
Advertisement
Mayank Agarwal, india, bangladesh,  cricket, மயங்க் அகர்வால்,

இந்துார்: வங்கதேச அணிக்கு எதிரான இந்தூர் டெஸ்டில் இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் சதம் விளாசினார்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இந்தூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (37), புஜாரா (43) அவுட்டாகாமல் இருந்தனர்.


புஜாரா அரைசதம்

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. அபு ஜயேத் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்த புஜாரா, டெஸ்ட் அரங்கில் 23வது அரைசதம் எட்டினார். தொடர்ந்து வேகமாக ரன்கள் சேர்க்க முயன்ற புஜாரா, 54 ரன்னுக்கு அவுட்டானார்.


மயங்க் நம்பிக்கை

மயங்க் அகர்வாலுடன், கேப்டன் கோஹ்லி இணைந்தார். எபாதத் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய மயங்க், தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார். மறுமுனையில் கோஹ்லி, 2வது பந்தில் 'டக்' அவுட்டாகி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மயங்க்குடன் இணைந்த ரகானே, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி முன்னிலை பெற்றது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால், டெஸ்டில் 3வது சதம் எட்டினார். இவருக்கு கைகொடுத்த ரகானே, டெஸ்ட் அரங்கில் தன் பங்கிற்கு 21வது அரைசதம் கடந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X