அபாய நகராகும் 'தலைநகர்': சுப்ரீம் கோர்ட் 'காட்டம்'

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: தொடர்ந்து மூன்றாவது நாளாக டில்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. இதனால் ஏராளமானோருக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டுள்ளது. டில்லியில் காற்றின் தரம் ஆபத்தாகி வருவதால், மக்கள் எப்படி சுவாசிப்பது என சுப்ரீம் கோர்ட் கோபமாக கேள்வி எழுப்பி உள்ளது.மோசமான காற்று மாசு : டில்லியில் இன்று (நவ.,15) அதிகாலையில் 482 என்ற அளவில் இருந்த காற்றின்

புதுடில்லி: தொடர்ந்து மூன்றாவது நாளாக டில்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. இதனால் ஏராளமானோருக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டுள்ளது. டில்லியில் காற்றின் தரம் ஆபத்தாகி வருவதால், மக்கள் எப்படி சுவாசிப்பது என சுப்ரீம் கோர்ட் கோபமாக கேள்வி எழுப்பி உள்ளது.latest tamil news
மோசமான காற்று மாசு :


டில்லியில் இன்று (நவ.,15) அதிகாலையில் 482 என்ற அளவில் இருந்த காற்றின் தரம் காலை 10 மணி அளவில் 504 என்ற நிலையை எட்டியது. 2.5 முதல் 332 என்ற அளவில் இருக்க வேண்டிய காற்றின் தரம் 500 ஐ கடந்த மிக மோசம் என்ற ஆபத்தான கட்டத்தை எட்டி உள்ளது. காசியாபாத், பரிதாபாத், குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் காலை முதல் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால், சாலைகளில் குறைந்த அளவே வெளிச்சம் காணப்படுகிறது.
காலை 9 மணி நிலவரப்படி காற்றின் தரம், மதுரா சாலை பகுதியில் 554 ஆகவும், டில்லி விமான நிலையம் அருகே 560 ஆகவும், சாந்தினி சவுக் பகுதியில் 484 முதல் 488 ஆகவும் உள்ளது. இதனால் லோதி கார்டன் பகுதியில் காலையில் வாக்கிங் சென்ற பலருக்கும் சுவாச பிரச்னை ஏற்பட்டுள்ளது.


latest tamil newsகெஜ்ரி நம்பிக்கை :


இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால், வானிலை அறிக்கையின்படி டில்லியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் காற்றின் தரம் உயரும். அப்படி உயராவிட்டால் ஒற்றை-இரட்டை இலக்க வாகனம் இயக்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக நவ.,18 அன்று முடிவு எடுக்கப்படும் என்றார்.


சுப்ரீம் கோர்ட் காட்டம் :


இதற்கிடையில் டில்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு சரமாரி கேள்வி எழுப்பியதுடன், பல வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவில், டில்லியில் நிலவும் காற்று மாசுபாட்டை சரி செய்ய காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். டில்லி அரசு கொண்டு வந்த ஒற்றை-இரட்டை இலக்க வாகன இயக்க திட்டத்தால் காற்று மாசுபாட்டில் இருந்து ஏதாவது நிவாரணம் கிடைத்துள்ளதா? என கேள்வி எழுப்பியது.


latest tamil newsஅதற்கு டில்லி அரசு அளித்துள்ள பதிலில், இத்திட்டத்தால் காற்று மாசு 5 முதல் 15 சதவீதம் குறைந்துள்ளது. இது நல்ல தீர்வை தந்துள்ளது. இதில் யாருக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. வேளாண் குப்பைகள் எரிக்கப்படுவதே டில்லி மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது.
மீண்டும் கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இன்று டில்லியில் காற்றின் தரம் 600 ஐ நெருங்கி உள்ளது. டில்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எப்படி சுவாசிப்பது? காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒற்றை-இரட்டை இலக்க வாகன இயக்கம் தீர்வாகாது என கோபமாக கூறியது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-நவ-201903:10:36 IST Report Abuse
sreenivasan kannan காற்று மாசு ஏற்பட வேளாண் குப்பைகள் மற்றும் பெருகி கொண்டே போகும் வாகனங்களின் எண்ணிக்கையும்தான்... இவற்றை கட்டுபடுத்தினாலே காற்று மாசை ஓரளவு தவிர்கலாம் இன்று டெல்லி....நாளை?
Rate this:
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
16-நவ-201901:37:30 IST Report Abuse
TAMILAN சிறப்பு போலீஸ் மாதிரி, சிரிப்பு நீதி மன்றங்கள். இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களை கேலி செய்யும் நீத்தி மன்றம் இன்றி நீதியை தர மறுக்கின்றது
Rate this:
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
15-நவ-201920:49:00 IST Report Abuse
Raghuraman Narayanan It is ideal now to change the country's capital from New Delhi to some other mid location in India where chaltha hai attritude does not exist.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X