சிதம்பரத்திற்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement
INX, Media, Chidambaram, DelhiCourt, சிதம்பரம், ஐஎன்எக்ஸ், மீடியா, ஜாமின்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்துள்ள நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் 2017 ம் ஆண்டு , விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதாக சிபிஐ எப்ஐஆர்., பதிவு செய்தது. 2018 ம் ஆண்டு, சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆக்.,21ம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.


latest tamil news


திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனாலும், சுப்ரீம் கோர்ட், சிபிஐ கைதில் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்ததால், வெளியே வர முடியாத நிலையில் இருந்தார். இந்நிலையில், நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.


latest tamil news


இதற்கிடையே அமலாக்கத்துறை கைதில் இருந்து ஜாமின் கோரி டில்லி ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணையின் போது, போலி நிறுவனங்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியது. இதனையடுத்து நீதிபதிகள், பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும். இதில், அவரின் பங்கும் இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்குவது, பொது நலனுக்கு எதிரானது எனக் கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-நவ-201912:06:10 IST Report Abuse
Yaro Oruvan எங்கய்யா அந்த ஜீரோ லாஸ் விஞ்சானி வக்கீலு... புண்ணியவான் எந்த நேரத்துல வாய வச்சானோ அப்பலருந்து அப்புச்சிக்கு சனியன் சுத்தி சுத்தி அடிக்குது.. மூணு நாள் அப்புச்சிய கைது செய்யாம இருந்தா இந்தியா குடி முழுகிப்போவாதுன்னு வாய வச்ச நேரம்.. இப்போ மூணு மாமாங்கமா வச்சி செய்றாங்க.. இது மூணு வருஷமா மாறினாலும் ஆச்சர்யமில்லை காரணம் அப்புச்சி செஞ்ச வேலைப்பாடு அப்புடி..
Rate this:
Cancel
M.Selvam - Chennai/India,இந்தியா
15-நவ-201922:24:04 IST Report Abuse
M.Selvam அதெல்லாம் சரி..மல்லையாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து யாரோ? அவர்களுக்கு என்ன தண்டனை?அது அடுத்த தேர்தலுக்கு பின்னர் தானா ?
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
15-நவ-201920:57:39 IST Report Abuse
Nathan உண்மையை ஓதுக்கய்யா, நிம்மதியா உள்ள போவே , ஓம் பேரை கெடுத்துக்காதே., கையில அமுக்கியே ஜாமீன் பாத்தியே போதாதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X