சிதம்பரத்திற்கு மீண்டும் ஜாமின் மறுப்பு| Dinamalar

சிதம்பரத்திற்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (53)
Share
புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்துள்ள நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் 2017 ம் ஆண்டு , விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதாக சிபிஐ எப்ஐஆர்., பதிவு செய்தது. 2018 ம் ஆண்டு, சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் பண
INX, Media, Chidambaram, DelhiCourt, சிதம்பரம், ஐஎன்எக்ஸ், மீடியா, ஜாமின்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கில் சிதம்பரத்திற்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்துள்ள நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் 2017 ம் ஆண்டு , விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பதாக சிபிஐ எப்ஐஆர்., பதிவு செய்தது. 2018 ம் ஆண்டு, சிதம்பரம் மீது அமலாக்கத்துறையும் பண மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆக்.,21ம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.


latest tamil news


திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனாலும், சுப்ரீம் கோர்ட், சிபிஐ கைதில் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்ததால், வெளியே வர முடியாத நிலையில் இருந்தார். இந்நிலையில், நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.


latest tamil news


இதற்கிடையே அமலாக்கத்துறை கைதில் இருந்து ஜாமின் கோரி டில்லி ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணையின் போது, போலி நிறுவனங்கள் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியது. இதனையடுத்து நீதிபதிகள், பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும். இதில், அவரின் பங்கும் இருப்பதால் அவருக்கு ஜாமின் வழங்குவது, பொது நலனுக்கு எதிரானது எனக் கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X