25 ஆண்டுக்கு சிவசேனா ஆட்சி தான்: ராவத் நம்பிக்கை

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (41)
Advertisement

மும்பை : மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா தலைமையிலான ஆட்சி தான் நடைபெறும் என சிவசேனா கட்சி எம்.பி.,யும் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.






மகாராஷ்டிராவில் தேசியவாத காங் - காங்., கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா ஆலோசனை நடத்தி வருகிறது. நாளை 3 கட்சிகளும் கவர்னரை சந்தித்து, எம்எல்ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளன. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத், வெறும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல அடுத்த 25 ஆண்டுகளுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி தான் மகாராஷ்டிராவில் நடக்கும் என்றார்.





மேலும் அவர் கூறுகையில், மக்களின் விருப்பத்தின் பேரிலேயே குறைந்தபட்ச பொது திட்டத்தின் அடிப்படையிலேயே கூட்டணி குறித்து காங்., மற்றும் தேசியவாத காங்., இடையே பேசப்பட்டது. தனிக்கட்சி ஆட்சியோ அல்லது கூட்டணி ஆட்சியோ, எதுவாக இருந்தாலும் அரசு நடப்பது தான் முக்கியது. வறட்சி, காலம் தவறிய மழை உள்ளிட்ட சமயங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படும். எங்களுடன் வந்து இணைந்திருப்பவர்கள் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள். அவர்களின் அனுபவம் எங்களுக்கு பயன்பட உள்ளது.

சுதந்திர போராட்டம் மற்றும் மகாராஷ்டிராவின் வளர்ச்சியில் பழமையான கட்சியான காங்.,க்கு முக்கிய பங்கு உள்ளது. அதன் காரணமாகவே அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனாவிடம் முதல்வர் பதவி இருக்க வேண்டும் என விரும்புகிறோம். யாராவது அவர்களின் திறமையை காட்டினால் தலைமை பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க சிவசேனா தயங்காது. கடந்த 50 ஆண்டுகளாக சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவுடன் தொடர்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
16-நவ-201900:15:25 IST Report Abuse
Aarkay எப்படியும் கான்+கிராஸ் இனி தனித்து நின்று ஒரு கவுன்சிலர் தேர்தல்கூட வெற்றி பெறமுடியாது. அழியும்போது, தனியே அழியாமல் தன்னை போன்ற இன்னும் சில பன்னாக்கட்சிகளை துணைக்கு சேர்த்து அழிந்தால், நாங்கள் என்ன வேண்டாமென்றா சொல்லப்போகிறோம்? கான்+கிராஸ் கட்சிக்கு பாடை கட்டிய பெருமை, proxy காந்தி குடும்பத்தையே சேரும்.
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
15-நவ-201923:43:39 IST Report Abuse
S.BASKARAN இவர் குறைத்து தான் சொல்கிறார், 250 என்பதுக்கு பிதில் 25 என்று தவறாக சொல்லிவிட்டார் போலும்.
Rate this:
Share this comment
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
15-நவ-201923:01:23 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இப்போது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் வரணுங்க. அப்போ தெரியும் காங்கிரஸ் நிறம் பற்றி. சிவசேனா முடியாது என்று சொல்லும். கூடிய சீக்கிரம் பொது சிவில் சட்டம் வரப்போகுது. அப்போது சிவசேனாவின் நிறம் தெரிஞ்சுடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X