பொது செய்தி

இந்தியா

காற்று மாசு: காணாமல் போன அதிகாரிகள்

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : டில்லியில் காற்று மாசு காரணமாக பார்லி., நிலைக்குழு கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த அதிகாரிகளே வராமல் இருந்த சம்பவம் நடந்துள்ளது.






டில்லியில் அபாய கட்டத்தை எட்டி உள்ள காற்று மாசுபாடு குறித்து சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் ஆகியன கண்டிப்பு தெரிவித்துள்ளன. இதற்கிடையில் இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சி துறைக்கான பார்லி., நிலைக்குழு கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது. ஆனால் காற்று மாசை காரணம் காட்டி, சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலர் வராமல் இருந்துள்ளனர்.
மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பார்லி., நிலைக்குழு அதிகாரிகள் தகவல் அனுப்பியும் சுற்றுச்சூழல் அமைச்சகம், டில்லி வளர்ச்சி கழக அதிகாரிகள், நகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.





டில்லியில் கார்கள் இயக்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்படாதது, ஒழுங்குமுறை பின்பற்றப்படாததால் 50 லட்சம் கார்கள் டில்லி சாலைகளில் இயங்கி வருகின்றன. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த 14,000 இயந்திரங்களுடன் கடந்த ஆண்டு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1150 கோடி என்ன ஆயிற்று? அந்த தொகை செலவிடப்பட்டது தொடர்பான அறிக்கை எங்கே? என்பன உள்ளிட்ட கேள்விகளை மூத்த அதிகாரிகளிடம் கேட்பதற்கே இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-நவ-201902:30:40 IST Report Abuse
ஆப்பு மை பிரேசில் சே போல்ரஹாஹூம். பாரத் மே சப் சவுக்கியம் ஹைன்...அதிகாரிகள் தூசு, மாசு பொருட்படுத்தாம டூட்டிக்கு போகணும் ஹைன்.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
15-நவ-201918:15:37 IST Report Abuse
 Sri,India வாகன விற்பனையை முறைப்படுத்த வேண்டும். யாரோ சம்பாதிக்க அப்பாவிகள் மூச்சு திணற வேண்டுமா ?? விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விதி மீறும் விவசாயிகளுக்கு கடுமையான சிறை தண்டனை சட்டத்தையோ கொண்டு வர வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
15-நவ-201918:00:59 IST Report Abuse
jagan டில்லி செய்வதற்கு ஒன்றும் இல்லை. பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதை தடுத்தால் மட்டுமே 50 % தீர்வு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X