அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல: ஸ்டாலின்

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (173)
Advertisement
#JusticeForFathimaLatheef,DMK,MKStalin,Stalin,ஐஐடி,திமுக,ஸ்டாலின், பாத்திமா, மரணம், தற்கொலை அல்ல,

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி.,யில் படித்து வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப், கடந்த 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மொபைலில் தன் தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என எழுதியிருந்ததை அடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரது தந்தை அப்துல் லத்தீப், தனது மகளின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினையும் அவர் சந்தித்தார்.





பாத்திமாவின் மரணம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்! குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக, நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது! இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (173)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
18-நவ-201912:34:29 IST Report Abuse
Nagarajan D ...அரசியல் வியாதி ஸ்டாலின்
Rate this:
Share this comment
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
17-நவ-201911:08:00 IST Report Abuse
ராஜேஷ் நியாயமா விசாரிச்சு கொலை செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக்குடுங்க அரசியல் செய்யாதீர்கள். உசுரு எல்லாருக்கும் ஒன்றுதானே ? அப்பாவிகளை புடிச்சு இவர்கள்தான் குற்றவாளின்னு வழக்கை முடிக்காதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
17-நவ-201905:16:32 IST Report Abuse
meenakshisundaram ஆஹா ஸ்டாலின் எப்போ உளவுத்துறை தலைவரானார்?எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கே சாதிக் baakshaa ,மற்றும் Ramesh ,ஆகிய வர்களின் மரணத்திலும் உள்ள 'ரகசியங்களை' வெளியிடுவாரா?
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
17-நவ-201912:12:34 IST Report Abuse
THENNAVANஅதெப்படி நீங்க சொல்ல முடியும், தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்டினி, இவன் கொன்னு தூக்கில் போட்டால் அது தற்கொலை , ஆனால் மற்றவர்கள் தற்கொலை செய்தாலும் அது கொலை என்ன ஒரு அயோக்கியனின் அறிக்கை. வாரிசுகளின் பதவிகள் இப்படித்தான் யோசிக்கும் செயல்படும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X