ஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல: ஸ்டாலின்

Updated : நவ 15, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (173)
#JusticeForFathimaLatheef,DMK,MKStalin,Stalin,ஐஐடி,திமுக,ஸ்டாலின், பாத்திமா, மரணம், தற்கொலை அல்ல,

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி.,யில் படித்து வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப், கடந்த 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மொபைலில் தன் தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என எழுதியிருந்ததை அடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரது தந்தை அப்துல் லத்தீப், தனது மகளின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினையும் அவர் சந்தித்தார்.





பாத்திமாவின் மரணம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்! குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக, நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது! இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X