பொது செய்தி

தமிழ்நாடு

ஓராண்டாகியும் நீங்காத 'கஜா' புயல் பாதிப்பு

Updated : நவ 16, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
கஜா, புயல் பாதிப்பு

கடந்த ஆண்டு வீசிய, 'கஜா' புயல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை புரட்டி போட்டது. ஓராண்டாகியும், அதன் பாதிப்பில் இருந்து, மக்கள் இன்னும் மீளவில்லை.

கடந்த ஆண்டு, நவ., 15 நள்ளிரவு முதல், மறுநாள் காலை வரை வீசிய, கஜா புயலால், டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்தன. 19 பேர் பலியாகினர்; நான்கு லட்சம் வீடுகள் சேதமடைந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது; 62 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன; ஒரு லட்சத்திற்கும் அதிகமான, மின் கம்பங்கள், 1,000க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன. ஒரே இரவில், மக்களின் வாழ்க்கை, 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது.

புயல் ஓய்ந்ததும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், அரசு தீவிரமாக இறங்கியது. அரசியல் கட்சிகள், தன்னார்வலர் அமைப்புகள், திரைத்துறை, தனியார் நிறுவனங்கள், இளைஞர்கள் என, பல்வேறு தரப்பிலிருந்தும், டெல்டா மாவட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதிலாக, தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். அந்த அறிவிப்பு, செயல்பாடு இன்றி உள்ளது.

மேலும், மத்திய அரசின், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பும், அப்படியே உள்ளது. இதனால், பல குடிசை வீடுகள், நிவாரணத்திற்கு வந்த தார்பாய்களுடன் காட்சிஅளிக்கின்றன. இன்னமும் பல கிராமங்களில், தார்பாயால் மூடப்பட்ட, சிதைந்து போன வீடுகளில், மக்கள் வசித்து வருகின்றனர். முறிந்துப் போன மரங்கள், பல்வேறு பகுதிகளில், அகற்றப்படாமல் கிடக்கிறது.


கோடியக்கரை வன சரணாலயத்தின், பெயர் பலகைகள் கூட, அகற்றப்படாமல் கிடப்பதே, அரசு அதிகாரிகளின், 'சிறப்பான' பணியை எடுத்துக்காட்டுகிறது. மீனவர்களுக்கு, நிவாரண உதவிகள் முறையாக சென்றடையவில்லை. கஜா புயல் சென்று, ஒரு ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது; ஆனாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் மீட்கப்படவில்லை. பல்வேறு இடங்களுக்கு இன்னும், நிவாரணம் கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரணம் கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில், இன்று வரை மனு அளித்து வருகின்றனர்.இதேபோல, பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு தொகை, இதுவரை கிடைக்கவில்லை.லட்சக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, மாமரம், முந்திரி, வாழை என, அனைத்தும் நாசமானது; விவசாயிகள், நிற்கதியாய் நின்றனர். ஓராண்டாகியும், கஜாவின் கோரத் தாக்குதலில் இருந்து மீள முடியாமல், டெல்டா மக்கள் உள்ளனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
16-நவ-201915:13:57 IST Report Abuse
Harinathan Krishnanandam கிராம நிர்வாக அதிகாரிகள் பைலை புட் அப் செய்து ஒரு வருடம் ஆகிவிட்டது அரசின் ஆணைக்கு காத்துக்கொண்டு இருக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
16-நவ-201911:38:51 IST Report Abuse
RM இதப்பத்தி கவலப்பட நேரம் எங்க?ஏதோ ஒருவர் கூறிய வார்த்தைக்கு தர்ணா செய்யும், தமிழகபி.ஜே.பி. இதற்கு போராடினால் நியாயம்
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-நவ-201917:07:30 IST Report Abuse
Pasupathi Subbianகழகங்களுக்கு ஒட்டு போட்டுவிட்டு, பி ஜெ பி இடம் கேட்கின்றீர்களே ஞாயமா ? அந்த தொகுதி எம் எல் ஏ மற்றும் எம்பீக்கள் என்ன செய்கின்றனர் ?...
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
16-நவ-201909:53:51 IST Report Abuse
Sitaraman Munisamy பொதுமக்கள் ,நிறுவனங்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அனைவரும் கொடுத்த நன்கொடையை மட்டுமே ஒழுங்காக பயன்படுத்தி இருந்தால் எப்போதோ இவர்களின் பிரச்சனைகள் நீங்கியிருக்கும்.செயல்படாத அரசை வைத்துக்கொண்டு என்ன செய்வது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X