சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கடுமையாக உழைக்கிறேன்; முன்னேறுகிறேன்!

Added : நவ 15, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
கடுமையாக உழைக்கிறேன்; முன்னேறுகிறேன்!

கணவரின் திடீர் மறைவால் சோர்ந்து முடங்கி விடாமல், அவர் நடத்திய, 'ரெடிசால்வ் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும், சாரதா பிரசாத்: சென்னையில் தான் பிறந்தேன்; வளர்ந்தது சேலத்தில். அப்பா, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். கணவர் பிரசாத், எலக்ட்ரிகல் இன்ஜினியர்.

திருமணம் ஆனதும், அமெரிக்காவில் குடியேறி விட்டோம். அங்கு, 14 ஆண்டுகள் வசித்த நிலையில், 2004ல் சென்னை வந்தோம். பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில், நான்கு ஊழியர்களுடன், இந்த, ஐ.டி., நிறுவனத்தை, கணவர் துவக்கினார். பள்ளி ஒன்றில் ஆசிரியையாக நான் பணியாற்றி வந்தேன்.

கடந்த, 2010ல், திடீரென கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அடுத்த சில வினாடிகளில் இறந்து விட்டார். என் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்தவர் அவர். தனியாளாக இரண்டு குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறேன் என்ற கவலை; அடுத்து என்ன பண்ணுவது என, தெரியவில்லை. கணவர் நடத்தி வந்த தொழிலை நடத்த முடிவு செய்தேன். அந்த பிசினஸ் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. கூச்சம் பார்க்காமல், பிசினஸ் விபரங்களை, ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

பெண் என்பதால், நிறைய புறக்கணிப்புகளையும் சந்தித்தேன். எல்லா சவால்களையும், வைராக்கியத்தால் சமாளித்து, தலைமை பொறுப்புக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன். நம்பிக்கையான ஊழியர்களுடன் சேர்ந்து, இரவு, பகலாக வேலை பார்க்கிறேன்.

இப்போது எங்கள் நிறுவனம், ஆண்டுக்கு, 12 கோடி ரூபாய் பிசினஸ் செய்யும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்த ஏழு ஆண்டுகளில், அதற்காக நாங்கள் மிகவும் கடுமையாக உழைத்தோம்; உழைக்கிறோம். கார்ப்பரேட் நிறுவனம் போல இல்லாமல், பல்வேறு சலுகைகளுடன் கூடிய, மகிழ்ச்சியான சூழலில், எங்கள் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, இரண்டு வேளை தரமான உணவு, காபி, டீ, ஸ்நாக்ஸ் போன்றவற்றை வழங்கி, அவர்களை உற்சாகமாக பணியாற்றச் செய்கிறேன்.

'முதலாளியாக இருந்தாலும், நிறுவனத்தின் அனைத்து வேலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்; அந்தந்த வேலைகளுக்கு தகுதியான, திறமையான ஊழியர்களை வைத்துக் கொள்ள வேண்டும்; அதற்காக அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும்' என்பன போன்ற விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்; பல விஷயங்களை கற்று வருகிறேன்.

ஒவ்வொரு பொறுப்புக்கும், தகுதியான நபர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால், எல்லா வேலைகளும் சரியாக நடக்கும். திறமையான ஊழியர்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டதால், முன்னேறுகிறேன்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாயவரத்தான் - chennai,இந்தியா
16-நவ-201919:23:22 IST Report Abuse
மாயவரத்தான் நம்பிக்கை தரும் கட்டுரை.கூடவே ஊக்கமும் உற்சாகமும் தருகிறது. நன்றி.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-நவ-201904:14:40 IST Report Abuse
 nicolethomson சொல்லிடீங்களா சரக்கு முறுக்கு என்று மண்ணாந்தைகளை அங்கே இடஒதுக்கீட்டில் பணியமர்த்தாவிட்டால் போராட்டம் என்று முன்னெடுக்க போகிறார்கள் ரியல் எஸ்டேட் கருங்காலிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X