கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் நேர பணப்பட்டுவாடா வழக்கு: ஆவணங்களை பார்க்க தி.மு.க., மனு

Added : நவ 15, 2019
Share
Advertisement
சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நடந்த, பணப் பட்டுவாடா விவகாரத்தில், சீலிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்வையிட அனுமதி கோரி, உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆர்.கே.நகரில், ௨௦௧௭ ஏப்ரலில், இடைத்தேர்தல் நடக்க இருந்தது. தேர்தலுக்கு முன்,
தேர்தல் நேர பணப்பட்டுவாடா வழக்கு: ஆவணங்களை பார்க்க தி.மு.க., மனு

சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நடந்த, பணப் பட்டுவாடா விவகாரத்தில், சீலிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்வையிட அனுமதி கோரி, உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகரில், ௨௦௧௭ ஏப்ரலில், இடைத்தேர்தல் நடக்க இருந்தது. தேர்தலுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அமைச்சர்கள், நிர்வாகிகளின் பெயர்கள் அடங்கிய, பட்டியல் இருந்ததாக தகவல் வெளியானது. ௮௯ கோடி ரூபாய் என்றும், அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வருமான வரித்துறை அறிக்கை அடிப்படையில், போலீசில், தேர்தல் ஆணையம் புகார் அளித்தது. அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தப் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வைரக்கண்ணன், தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் அருண் நடராஜன் வழக்கு தொடுத்தனர்.வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பணப் பட்டுவாடா தொடர்பான, முதல் தகவல் அறிக்கையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தபோது, மருதுகணேஷ் சார்பில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரப்பட்டது.இதற்கு, தமிழக அரசு பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். தேர்தல் ஆணையம் சார்பில், சீலிட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, வேட்பாளர் மருது கணேஷ் தாக்கல் செய்த மனு:தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த ஆவணங்கள்; வழக்கு டைரி; வருமான வரித்துறை அளித்த ஆவணங்கள் ஆகியவற்றை, சீலிட்ட உறையில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சீலிட்ட உறையில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருப்பதால், எங்களால் அவற்றை பார்க்க முடியவில்லை.

நியாயமான விசாரணை என்றால், ஆவணங்களை பார்வையிட, எங்களை அனுமதிக்க வேண்டும். அப்போது தான், எங்களுக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கும். எனவே, ஆவணங்களை பரிசீலிக்க, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை, டிச., ௧௮க்கு தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X