பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதத்தின் மரபணு பாக் ; இந்தியா பதிலடி

Updated : நவ 17, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
யுனெஸ்கோ, பயங்கரவாதம், மரபணு, பாக்., இந்தியா, பிரதிநிதி, குற்றங்கள், இம்ரான்

பாரிஸ் : ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் செய்து வந்த பொய் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் விதமாக, 'பயங்கரவாதத்தின் மரபணுவாக பாக்., உள்ளது' என, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலை நகர், பாரிசில் நடைபெற்ற, 'யுனெஸ்கோ'வின், 40வது பொதுக் கூட்டத்தில், இந்தியா தரப்பில் பதிலடி தரப்பட்டது.


பிரதிநிதிகள்


யுனெஸ்கோ அமைப் பின், 40வது பொதுக் கூட் டம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற, இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை வகித்த துாதர் அனன்யா அகர்வால் பேசியதாவது: கடந்த, 2018ல், மோசமான நாடுகளின் பட்டியலில், பாகிஸ்தான், 14வது இடத்தில் இருந்தது. அவர்கள் வேண்டுமென்றே, விஷமத்தனமாக பேசி வருவதை, இந்தியா கடுமை யாக கண்டிக்கிறது.

பாக்.,கில் சிறுபான்மை சமூகத்தினர் சந்திக்கும் மனித உரிமை மீறல்களை பற்றி பொருட்படுத்தாமல், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களில், இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்கத்துடன், பாக்., பொய் பிரசாரங்களை கட்டவிழ்த்து விடுகிறது.

பாக்., சுதந்திரம் பெற்றபோது, அந்நாட்டு மக்கள் தொகையில், சிறுபான்மையினர், 23 சதவீதம் இருந்தனர். இப்போது, அவர்களின் எண்ணிக்கை, 3 சதவீதமாக குறைந்துள்ளது. ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், அஹமதியர்கள், ஷியாக்கள், பஷ்டூன்கள், சிந்திக்கள், பலுாச்சிகளுக்கு எதிராக, அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. அப்பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள், 'ஆசிட்' தாக்குதல்கள், ஆணவக் கொலைகள், கட்டாய மத மாற்றங்கள், கட்டாய திருமணங்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் நடத்தப்படுகின்றன.


பிறப்பிடம்


அனைத்து விதமான பயங்கரவாத செயல்களின் பிறப்பிடமாக பாக்., திகழ்கிறது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், ஐ.நா., சபை மேடையிலேயே, அணு ஆயுத போர் குறித்து பேசியுள்ளார். ஒசாமா பின்லேடன் மற்றும் ஹக்கானி போன்ற சர்வதேச பயங்கரவாதிகளை, தங்கள் நாட்டின் கதாநாய கர்கள் என, முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் பேசியுள்ளார். பயங்கர வாதிகளின் மரபணுவாக பாக்., உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
16-நவ-201911:39:51 IST Report Abuse
Yes your honor மிகச் சரியான அதேசமயம் ஆழமான மற்றும் அர்த்தம் பொதிந்த பதிலடி வார்த்தைகள். உண்மையுள்ளவர்கள் பயப்பட மாட்டார்கள் என்பது புலப்படுகிறது... வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
16-நவ-201906:16:38 IST Report Abuse
blocked user பேச்சில் மட்டும் பதிலடி கொடுக்காமல் பாக்கிகளுக்கு உண்மையான அடியாக இருக்கவேண்டும். இல்லை என்றால் திரும்பவும் புதிய பொய்களை அள்ளி விட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
16-நவ-201907:17:13 IST Report Abuse
Darmavanஇதை சொல்வதற்கே ஆளில்லாமல் தான் பாகிஸ்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறது. உலகத்துக்கு இது தெரிய வேண்டும்,...
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-நவ-201904:12:06 IST Report Abuse
 nicolethomson இந்த முறை பாகிஸ்தானா சீனாவா என்று பார்க்கப்போகிறோம் , சீனாவை சிதறிடிக்க பாகிஸ்தானை இறங்கியுள்ளது அமெரிக்கா , ஆனால் பாகிஸ்தானோ டபுள் கேம் ஆடிக்கொண்டுள்ளது , இந்தியாவில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்தாலும் குற்றம் கண்டுபிடித்து கொண்டிருந்த பாகிஸ்தான் சீனாவில் உய்க்கர் முஸ்லிம்களின் பெண்களுக்கு அரசே டெம்பரவரி கணவர்களை கட்டாயமாக அனுப்பி வைக்கும்போதும் சும்மா இருக்கிறதென்றால் எங்கோ இடிக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X