அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சியா?

Updated : நவ 16, 2019 | Added : நவ 15, 2019 | கருத்துகள் (33)
Advertisement
MK Stalin, DMK, Stalin, ஸ்டாலின், திமுக, அறிக்கை

சென்னை : ''உள்ளாட்சி தேர்தலை நிறுத்த, நாங்கள் முயற்சிப்பதாக, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டு, பொய் பிரசாரம் செய்கின்றனர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை, கொளத்துார் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில், ஸ்டாலின் தலைமையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அப்போது, ஸ்டாலின் பேசுகையில், ''நீட் நுழைவுத்தேர்வு காரணமாக, டாக்டர் கனவு கலைந்ததால், மனம் உடைந்து, தற்கொலை செய்து கொண்ட அனிதா பெயரில், பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் வாயிலாக, இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. தேர்வு எழுதுவதற்கான முழு கட்டணத்தையும், பயிற்சி மையம் ஏற்கிறது,'' என்றார்.


பொய் பிரசாரம்


பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது, எங்களது கோரிக்கை இல்லை. 'முறையாக நடத்த வேண்டும். ஒதுக்கீடுகள் முறையாக இல்லை; அதை சரி செய்யுங்கள்' எனக்கோரி, நீதிமன்றத்துக்கு சென்றோம். சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும், இதை, நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம்.ஆனால், திரும்ப திரும்ப அதே பொய்யை, அ.தி.மு.க.,வினர் சொல்லி வருகின்றனர். தேர்தலை நிறுத்த வேண்டும் என, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு, தேர்தலை நிறுத்தும் எண்ணத்தில் தான், அ.தி.மு.க., இப்படி பேசுகிறதோ என்ற சந்தேகம், எங்களுக்கு எழுந்திருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க, தி.மு.க., தயாராக உள்ளது.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.நீட் தேர்வு ரத்து!ஸ்டாலின் அறிக்கை:சட்டசபையின் குளிர் கால கூட்டத் தொடரைக் கூட்டி, அதில், 'தமிழகத்தில், 'நீட்' மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்ற மசோதாவை, மீண்டும் நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி, ஒப்புதலை பெற வேண்டும்.

மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் கொடிய, நீட் தேர்வு அடுத்து வருவதற்குள், இப்போதே, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


மேல்முறையீடு!


தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் அறிக்கை: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, ஐந்து நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதன் வாயிலாக, தர்மபுரி உள்ளிட்ட, 5 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இது தெரிந்தும், உச்ச நீதிமன்றத்தில், முறையாக வாதிடாமல், அ.தி.மு.க., அரசு தோற்று இருப்பது, கடும் கண்டனத்துக்குரியது. உடனே முதல்வர், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mridangam - madurai,இந்தியா
16-நவ-201923:36:34 IST Report Abuse
mridangam Wikileaks.....
Rate this:
Share this comment
Cancel
Bneutral - Chandigarh,இந்தியா
16-நவ-201922:32:10 IST Report Abuse
Bneutral dravida's samcher kalvi disaster & all other state govt owned syllabus people are able to clear NEET. apart from state's limited seats 15% of rest of India is advantage of all state bright students can able to join Medicine..(if anyone shouts about village students again the answer is quality of education & its not fate of apart from village students) Malpractice by students in TN, its a pure administration failure of (admission process) who didnt verify properly.. Judiciary who insisted for a wrong person case of adhaar card not mandatory for NEET exam / admission process.
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
16-நவ-201916:27:40 IST Report Abuse
thulakol திருட்டு திராவிட கூட்டம் தான் பொய் சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டு உள்ளீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X